







குடிமகான் திரை விமர்சனம். திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படுவது என்பது எழுதப்படாத விதி. சார்லி சாப்ளின் முதல் ராம நாராயணன் வரை ஏன் சந்தானம் வரை இதை கடைபிடித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வழியில் குடி மகான் படத்தை வயிறு குலுங்க சிரிக்க எடுத்து இருக்கிறார்கள்.
ஒருவருக்கு குடித்தால் தான் போதை ஏறி பல பிரச்சனைகள் தேடி வரும் ஆனால் இந்த படத்தில் குடிக்காமலே கதாநாயகனுக்கு போதை ஏறி பல பிரச்சனைகள் வந்து வேலையும் போய்விடுகிறது.அதன் பிறகு அவர் என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை.
புது ஹீரோ விஜய் சிவன் எதார்த்தமாக நடிப்பை வழங்கி இருக்கிறார்.கதாநாயகி சாந்தினி குடும்ப குத்து விளக்காக அருமையாக நடித்திருக்கிறார். சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள், பாடல்கள், பின்னணி இசை பரவாயில்லை. புதுமுக இயக்குனர் பிரகாஷ் சமூக கருத்துக்களை நகைச்சுவை கலந்து வழங்கி இருக்கிறார். விலா நோக சிரிக்க வைக்கும் குடிமகான் அல்ல சிரிப்பு மகான். சிறப்பு..3.5/5