







இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களிடம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து திரு பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் சுகன்யா அறிமுகமான ” புது நெல்லு புது நாத்து ” படத்தின் தயாரிப்பாளர் திரு.சி.என்.ஜெய்குமார் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இன்று இயக்குனர் திரு. பாரதிராஜா புதிய நீதிக்கட்சி தலைவர் திரு. ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி திரு. தாணு , தயாரிப்பாளர்கள் திரு.சித்ராலட்சுமணன் , திரு முரளி நடிகர் மனோஜ் பாரதி மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் செனாய் நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடலக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த திரு.ஜெய்குமார் அவர்கள் புதிய நீதிக்கட்சி தலைவர் திரு.ஏ.சி சண்முகம் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகை வடிவுக்கரசியை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.