







மாற்று திறனாளிகள் குழந்தைகள் உட்பட சுமார் 1008 குழந்தைகளை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு
*ஆர் வை ஏ மெட்ராஸ் மெட்ரோ டிரஸ்ட்*
*சென்னை food bank அறக்கட்டளையின் 30 ஆம் ஆண்டு நிறைவடைந்து 31 ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் சுமார் 30 அறக்கட்டளை சார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் மாற்று திறனாளிகள் குழந்தைகள் உட்பட சுமார் 1008 குழந்தைகளை வரும்,25.4.2023,அன்று தேவஸ்தானம் திருப்பதி திருமலை திருக்கோயிலில் ரயில் 🚆 மூலம் அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது*
*சென்னை தீ.நகர் பகுதியில் தனியார் வளாகத்தில்*
*TTD சேகர் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பு*
சென்னை food bank அறக்கட்டளையின் தலைவர் நிர்மல் நாகர், செயலாளர் கிரிஷ்பண்டாரி , மற்றும் அமித்கடலோயா, கமல் பல்லோர் , உறுப்பினர்கள் கலந்து கொண்ட
ஆர் வை ஏ மெட்ராஸ் மெட்ரோ அறக்கட்டளை மூலம் வரும் 25.4.2023 தேதி அன்று சிறப்பு ரயில் 🚆 மூலம்
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் 30 அறக்கட்டளை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு
நல திட்ட உதவிகளாக
ஒவ்வொரு மாதமும் மட்டும் சுமார் 10,000 கிலோ கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன
இந்த அறக்கட்டளையின் 30 ஆம் ஆண்டு நிறைவடைந்து 31 ஆம் ஆண்டு தொடக்கம் விழாவாக இன்று முதல் தொடங்கி வரும் நிலையில்
அனைத்து அறக்கட்டளையில் இருந்தும் மொத்தம் 1008 ஏழை எளிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 100 ஆசிரியர்கள், அனைவரையும் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் திருக்கோயில் அழைத்து செல்லும் வகையில் சிறப்பு ரயிலில் அழைத்து செல்ல 🚆 ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்
25.4.2023 ஆம் தேதி அன்று TTD தலைவர் , சுபா ரெட்டி , ஏ.ஜே.சேகர் TTD தமிழ்நாடு, பாண்டிச்சேரியின் தலைவர்,மற்றும் தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் திரைப்பட நடிகர் கார்த்திக், ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்
என செய்தியாளர்கள் சந்திப்பில் சேகர் ரெட்டி அவர்கள் தெரிவித்தார்