Take a fresh look at your lifestyle.

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா

441

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ” மாற்றம் ” என்ற பெயரில் மாற்றத்தை தரும் பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோறும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதன் முதல் கட்டமாக ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில் தலா 10 டிராக்டர்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து நேற்று நடிகர் எஸ். ஜே.சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பக்கம், மேல்தெருவில் வசிக்கும் விவசாயி பத்ரி என்பவருக்கு அவரது சொந்த செலவில் டிராக்டர் வழங்கி மாற்றத்திற்கான தனது சேவையை துவங்கினார்.