Take a fresh look at your lifestyle.

*’டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் #Karthi29*

78

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் #Karthi29 பிரம்மாண்ட துவக்கம்*

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் #Karthi29 அதிரடி ஆரம்பம்*

தென்னிந்திய திரைத்துறையில், மாறுபட்ட களத்தில், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி,
ஒக்கே ஒக்க ஜீவிதம், ஃபர்ஹானா போன்ற அழுத்தமான படைப்புகளை, பெரிய திரையில் எந்த சமரசமும் இல்லாமல் தயாரித்து வெளியிட்ட, சிறப்பு மிகு தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது இந்நிறுவனம், படத்திற்குப் படம் வித்தியாசமான காதாப்பாத்திரங்களில், முற்றிலும் வேறுபட்ட களங்களில், வெற்றிப்படங்களைத் தந்து வரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியுடன் மீண்டும் கைகோர்க்கிறது.

முன்னதாக கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற கிளாசிக் பிளாக்பஸ்டர் படங்களையும், காஷ்மோரா மற்றும் ஜப்பான் போன்ற மாறுபட்ட சோதனை முயற்சிகளையும் வழங்கியுள்ளனர்.

தற்போது, கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணையும் அடுத்த படமான #Karthi29 படத்தினை, இயக்குநர் தமிழ் இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விமர்சன ரீதியாக, பெரும் பாராட்டுக்களைக் குவித்த, “டாணாக்காரன்” மூலம் இயக்குநராக தமிழ் அறிமுகமானவர். இத்திரைப்படம் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வெளியான போதிலும், முன்னணி விமர்சகர்களிடமிருந்து, பெரும் பாராட்டுக்களைப் பெற்றதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் குவித்தது குறிப்பிடதக்கது.

#Karthi29 திரைப்படம் பீரியாடிக் திரைப்படமாக, பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

இந்த #Karthi29 பிரம்மாண்ட திரைப்படத்தினை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் தலைமையிலான ‘ஐவிஓய்’ ( IVY ) என்டர்டெயின்மென்ட் மற்றும் ’பி ஃபோர் யு’ ( B4U ) மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

#Karthi29 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தற்போது தொடங்கிவிட்டனர். #Karthi29 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.