







இன்று வெளியாகி இருக்கும் டெய்லர் திரைப்படத்தின் ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் டைரக்டர் நெல்சன் திலிப் குமாரும் ரஜினி ரசிகர்களையும் பொதுவான ரசிகர்களையும் ஏமாற்றி விட்டார்.
இரண்டு மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடிய செயலர் படம் நெளிய வைக்கிறது.
காலம் போன காலத்தில் பணத்துக்காக ரஜினி இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டுமா? என்று படம் பார்க்கும் ரசிகர்கள் அவரை தூற்றுவது காதில் கேட்கிறது.கவுரவ வேடத்தில் நடித்த ரஜினியை ஹிரோவாக்கியுள்ள ரகசியம் ரசிகர்களுக்கு புரியாத என்ன?
தங்கப்பதக்கம், விக்ரம் 2, இந்தியன் போன்ற படங்களின் தொகுப்பாக இது தெரிகிறது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
படத்தில் வன்முறை காட்சிகளுக்கு பஞ்சமில்லை ரஜினி படம் என்றாலே குழந்தைகளும் பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் ஆனால் இந்த படம் அந்த மாதிரியான வகையில் இல்லை.
முதல் பாதி சிறப்பாக இருக்கும் படத்தை இரண்டாவது பாதியில் சொதப்பி விடுவார்கள் என்பது இந்த படத்திற்கும் பொருந்தி இருக்கிறது.
இடைவேளைக்கு பிறகு படம் பார்க்க வரும் ரசிகர்களை கொஞ்சம் தூங்க வைத்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
சிலுக்கு சுமிதா மடிப்பு அம்சா போன்ற நடிகைகளை போல் தமன்னாவும் ஒரு கவர்ச்சி பாடலுக்கு ஆடி விட்டு போகிறார்.
யோகி பாபுவுக்கும் கிங்ஸ்லிக்கும் நல்ல வாய்ப்பு அதை சரியாகவே பயன்படுத்தி சிரிக்க வைக்கிறார்கள்.
ரஜினியின் மகனாக வரும் வசந்த் ரவி தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்.
மோகன் லாலையும் டம்மியாக்கிவிட்டார். அந்த சிவராஜ்குமார், தெலுங்கு நடிகரையும் துணை நடிகர்கள் மாதிரி காட்டிவிட்டார், டைரக்டர்.
மொத்தத்தில் ரசிகர்களை மட்டுமல்ல சன் பிக்சர்ஸையும் ஏமாற்றி விட்டார், டைரக்டர். அனிருத் இசை ஆறுதலாக இருக்கிறது. மொத்தத்தில் ஜெயிலர் இன்னும் நன்றாக இருக்க திரைக்கதை அமைத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கலாம்.
மார்க் 40/100