Take a fresh look at your lifestyle.

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

287

நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர உள்ள நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது…

படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது. படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி, தனது மிகச்சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார். படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யுடைய நடிப்பை கண்டு பிரமித்து போனேன். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும். என்னை முழுதாக நம்பி இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை தந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக உள்ளது. அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகை பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். ( மகதீரா, விஜய்யின் சுறா படப்புகழ் ) தேவ் கில், ( வேதாளம் புகழ் ) ராகுல் தேவ் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திருகடல் உதயம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.