*சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட்.


முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது.

ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பது தான் சைலண்ட் திரைப்படம்.

சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருப்பது அழகு.

இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை படம் தருகிறது.

ஒரு கொலை அதை தொடர்ந்து விசாரணை என அடுத்தடுத்த கொலை, என விரியும் திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே அட்டகாசமாக எழுதி அசத்தியுள்ளார் சமய முரளி. போலீஸ் கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தலாக உள்ளது.

இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டியே நடித்துள்ளார், இயக்கத்தை விட அவர் நடிப்பு பிரமாதம்.

மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள்.

குறைந்த படெஜெட் என்றாலும்
சேயோன் முரளி ஒளிப்பதிவு படத்தை ஈடு செய்கிறது. எடிட்டிங் ஓகே.

இசை சமயமுரளி செய்துள்ளார் ஆச்சரியம் முதல் படம் போல தெரியவில்லை, பாடல்கள் தேர்ந்த இசையமைப்பாளர் இசையமைத்தது போல உள்ளது. மூன்று பாடல்களுமே ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசையும் அட்டகாசம்.

படத்தில் கதை திரைக்கதையில் எந்த ஓட்டையும் இல்லை, ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் உருவாக்கத்தில் ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் தெரிகிறது. அதை சரி செய்து, இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.

தமிழ் சினிமாவுக்கு புதிதான திரில்லர் இல்லையென்றாலும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தரும் டீசண்டான திரில்லர் படம்.

கண்டிப்பாக ரசிகர்கள் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

*தொழில்நுட்ப வல்லுநர்கள் விபரம்*

இயக்குநர்: கணேஷா பாண்டி
தயாரிப்பாளர்: S.ராம் பிரகாஷ்
இசையமைப்பாளர்: T சமய முரளி
பின்னணி இசை : ரவி K
பாடல் இசை : T சமய முரளி
பாடல் : T சமய முரளி
பாடியவர் : T சமய முரளி, K S சித்ரா, பிரியங்கா, ஶ்ரீனிஷா ஜெயசீலன், நித்ய ஶ்ரீ, கானா ஃபிரான்ஸிஸ்
ஒளிப்பதிவாளர்: சேயோன் முத்து
படத் தொகுப்பாளர்: சரண் சண்முகம்
மக்கள் தொடர்பு – ஹேமானந்த்

kollywood newsSilent movie reviewsilent reviewtamil cinema newstamil film news
Comments (0)
Add Comment