Take a fresh look at your lifestyle.

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி மறைவு

9

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கங்கள் மற்றும் நண்பர்கள் உதவி வந்தனர்.

 

இந்த நிலையில் சமீபத்தில் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” என்ற படத்திற்கு தானாக முன்வந்து டப்பிங் பேசி கொடுத்தார்.

 

பிறகு, வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு வந்த புற்றுநோய் அவரின் மூளை உட்பட உடல் முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

 

மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள்.

 

தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது.

 

இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும்!

 

@GovindarajPro