Take a fresh look at your lifestyle.

விரைவில் வரவுள்ள, புத்தம் புது காலை விடியாதா… என்ற பல இசையமைப்பாளர் இசைத் தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்துகிறது

265

ஜீ..வி..பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற தமிழ்த் துறையின் இளம், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் தனித்துவமான கலவையை இந்த இசைத் தொகுப்பு கொண்டுள்ளது.

ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி 14 அன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் Amazon Prime Video மூலம் வெளிவரவுள்ளது.

மும்பை, இந்தியா, ஜனவரி-8, 2022 – புத்தம் புதுக் காலை விடியாதா… தொகுப்பு கொண்டுள்ள மனதைக் கவரும் உற்சாகமான கதைகளின் உணர்வைக் கொண்டாடும் விதமாக இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத் தமிழ் இசைத்தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்தியது. புத்தம் புதுக் காலை தொகுப்பின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனுக்கு இடையே நம்பிக்கை, மீட்டெழுச்சி மற்றும் மன உரம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பதிப்பின் இசை முன்னிருத்துகிறது. ஜீ. வி. பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை ஒன்றிணைத்து, இந்த இசை ஆல்பம் Amazon Original தொடரின் ஒவ்வொரு கதையின் சாரத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறது.

தமிழ் சினிமாவில் சில சிறந்த பாடல்களுக்காகப் புகழ்பெற்ற ஜீ. வி.பிரகாஷ் குமார், Amazon Original உடன் கொண்டுள்ள தனது வெற்றிகரமான உறவைத் தொடர்கிறார், தமிழ்த் தொகுப்பின் இரு பதிப்புகளுக்கும் இடையே ஒரு பொதுவான காரணியாக இவர் உள்ளார். பன்முகத் திறமை கொண்ட ஜீ வி, இதற்கு முன்பு புத்தம் புதுக் காலை தொகுப்பின் தலைப்புப் பாடலை உருவாக்கியிருந்தார், தற்போது புத்தம் புதுக் காலை விடியாதா தொகுப்பின் தலைப்புப் பாடலைப் பாடி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை கேபர் வாசுகி எழுதியுள்ளார், மேலும் யாமினி கண்டசாலா இணைந்து பாடியுள்ளார்.

இந்த இசைத் தொகுப்புத் தொடர், ஐந்து தனித்த எபிசோட்களுக்கான மாறுபட்ட மற்றும் அசல் பாடல்களைக் கொண்டுள்ளது, அவை தமிழ்த் துறையைச் சார்ந்த ஐந்து இளம் மற்றும் திறமையான இசையமைப்பாளர்களால் இயற்றப்பட்டுள்ளன. நிழல் தரும் இதம் தலைப்பில் பிரதீப் குமார் ‘நிழல்’ (கேபர் வாசுகியின் வரிகள்) பாடி இசையமைத்துள்ளார், முககவச முத்தம் படத்திற்காக ஷான் ரோல்டன் ‘கிட்ட வருது’ (பாலாஜி மோகன் பாடல் வரிகள்) பாடி இசையமைத்துள்ளார். லோனர்ஸ்-இற்காக கௌதம் வாசு வெங்கடேசன் ‘தனிமை என்னும்’ (இணை பாடகி அமிர்தா சுசாந்திகா மற்றும் பாடல் வரிகள் ஹலிதா ஷமீம்) என்ற பாடலைப் பாடி, இசையமைத்துள்ளார், “தி மாஸ்க்” -இற்காக கேபர் வாசுகி ‘முகமூடி’ என்ற பாடலை எழுதி, இசையமைத்துள்ளார். மௌனமே பார்வை-க்காக “விசிலர்” (பாடல் வரிகள் சபரிவாசன் சண்முகம்) என்ற பாடலை கார்த்திகேய மூர்த்தி பாடி இசை அமைத்துள்ளார்.

Link here: https://www.instagram.com/tv/CYbCjlUg6Ba/?utm_medium=copy_link

இசையமைப்பாளர்களின் கருத்துகள்

பாடல் திரட்டு மற்றும் கருப்பொருள் சார்ந்த பாடலுடன் தனக்குள்ள தொடர்பு குறித்துப் பேசிய ஜீ.வி.பிரகாஷ் குமார், “நாம் அனைவருமே நம்மில் பல கதைகளைக் கொண்டவர்கள், அவற்றில் சிலவற்றை இசையால் இழைப்பதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. அல்லலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற மனித உணர்வுகளைத் தட்டி எழுப்பும் இந்தத் தொகுப்பின் இரண்டு பதிப்புகளிலும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டாம் பதிப்பில் உள்ள கதைகள், நம்பிக்கை மற்றும் மீட்டெழுச்சியின் உணர்வுப் பூர்வமான எண்ணங்கள், இசையில் சரியான பதங்களை வெளிக்கொணர எனக்கு உந்துதலாக இருந்தது. ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ பாடலை நான் உருவாக்கி ரசித்த அளவுக்கு பார்வையாளர்களும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். Amazon Original தொடரின் இசை, தற்சமயம் மிகவும் தேவையான நேர்மறையான எண்ணங்களை வெளிக் கொணரும் என நம்புகிறேன்” என்றார்.

முககவசம் முத்தம் பாடலின் பாடகரும், இசையமைப்பாளருமான சீன் ரோல்டன் பேசுகையில், ஒரு திரைப்படமாக “முககவச முத்தம்” உங்கள் இதயத்தை உருக வைக்கும். தொற்றுநோய் நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மில் பெரும்பாலோரை எவ்வாறு உடல் ரீதியாக தூர விலக்கியுள்ளது என்பதை நாம் கண்டுள்ளோம். நம்பிக்கையின் கருப்பொருளை மனதில் வைத்து, தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையும், ஒரு சிறந்த வருங்காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துவதற்காக நாங்கள் ‘கிட்ட வருது’ பாடலை உருவாக்கினோம். பாலாஜி மோகனின் பாடல் வரிகளுடன் வரும் இந்த கவர்ச்சியான டியூன், சரியான செய்தியைப் பரப்பும் வல்லமை கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ‘கிட்ட வருது’ பாடலைக் கேட்கவும், புத்தம் புது காலை விடியாதா… இசைத் தொகுப்பை Prime Video-இல் காணவும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது.” என்றார்.

லோனர்ஸ்-க்காக ‘தனிமை என்னும்’ பாடலின் பாடகரும் இசையமைப்பாளருமான கெளதம் வாசு வெங்கடேசன் கூறுகையில், “கதையின் தற்போதைய மற்றும் தனித்துவமான கருத்தோடு இப்படத்தை இணைக்கும் முயற்சியின் காரணமாக இந்தப் படத்திற்கு இசையமைப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு மெய்நிகர் திருமணத்தில் இரண்டு நபர்கள் சந்திப்பது என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்படாத ஒன்று. இந்த தனித்துவமான காட்சியை இசையின் மூலம் பிரதிபலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தம் புதுக் காலை விடியாதாவில் லோனர்ஸ்களை அனைவரும் காண்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… மேலும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் எங்கள் இசையை எடுத்துச் சென்ற Prime Video-க்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

மௌனமே பார்வையாய்-இன் ‘விசிலர்’ பாடலின் பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திகேய மூர்த்தி பேசுகையில், “மௌனமே பார்வையாய்-இன் கதையை விவரிப்பது சுலபமல்ல. பெரும்பாலான தம்பதிகள் தங்கள் உறவின் ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் ஒரு கதையை இது சொல்கிறது மற்றும் எளிமையான ஆனால் சொல்லப்படாத உணர்வுகளை எடுத்துக்காட்டுகிறது. இதை எனது ‘விசிலர்’ பாடலின் மூலம் துல்லியமாக வெளிப்படுத்த முயற்சித்தேன், பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும் என்று நம்புகிறேன். புத்தம் புது காலை விடியாதா… Prime Video-இல் வெளியிடப்படுவதையும், இப்பாடல் மற்றும் ஒட்டுமொத்தத் தொகுப்பிற்கான பார்வையாளர்களின் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

‘நிழல் தரும் இதம்’ சார்ந்து ‘நிழல்’ பாடலின் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார் பேசுகையில், “நிழல் தரும் இதம், ஒரு மகள் மற்றும் பிரிந்து சென்ற தந்தையை உள்ளடக்கிய இழப்பு மற்றும் ஏக்கத்தின் அழகான கதை. ‘நிழல்’ என்ற எனது பாடலின் மூலம், அந்த பெண்ணின் உணர்வுப்பூர்வமான மனநிலையை பார்வையாளர்கள் உணர்ந்து, அவளது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலத்தை அவள் கடந்து செல்லும்போது அவளது மன குழப்பங்களுடன் அவர்கள் தொடர்புகொள்வதே இதன் நோக்கமாகும். Prime Video-இல், புத்தம் புதுக் காலை விடியாதா பாடலை அனைவரும் கேட்டு ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

தி மாஸ்க்கில் ‘முகமூடி’ பாடகர், இசையமைப்பாளர் மற்றும் எழுத்தாளரான கேபர் வாசுகி கூறுகையில், “சுய ஏற்பு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. அது முடிந்தால், நம் அன்புக்குரியவர்களின், குறிப்பாக நம் பெற்றோரின் ஏற்பை நாம் எதிர்பார்க்கிறோம். தி மாஸ்க்கில், கதாநாயகன் அவனது பெற்றோர், அவனது நண்பர்கள் மற்றும் அவனுடன் இருக்கும் உறவு தொடர்புபடுத்தக்கூடியது மற்றும் ஆழமானது. பாடலின் வரிகள் அவரது வாழ்க்கையின் தருணங்களை பிரதிபலிக்கிறது, அது அவரது சுய ஏற்புக்கு வழிவகுக்கும். அவர் உணரும் சுதந்திரம் இசை அமைப்பில் பிரதிபலிக்கிறது. Amazon Prime Video -இல் வெளிவரும், இசை மற்றும் இசைத்தொகுப்புக்கு பார்வையாளர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.” என்றார்.

புத்தம் புது காலை விடியாதா… ஒலிப்பதிவு வார்னர் மியூசிக் இந்தியாவால் வெளியிடப்பட்டது மற்றும் உலகளவில் முக்கிய இசை ஸ்ட்ரீமிங் சேவைகளில் கிடைக்கிறது.

சுருக்கம்:

புத்தம் புதுக் காலை விடியாதா-இன் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இருந்தாலும், நம்பிக்கையின் தனிப்பட்ட புரிதல் மற்றும் மனித உணர்வின் புதிய தொடக்கங்கள் என்ற கருப்பொருளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் ஆகியவை பற்றிச் சொல்லும் இரண்டாவது கோவிட்-19 லாக்டவுன் காலகட்டக் கதைகள்.

ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.