Take a fresh look at your lifestyle.

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் தவம்!”: திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி!

7

தலைப்பு 1: மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!

………………………………

 

தலைப்பு 2: “ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் தவம்!”: திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி!

………………………..

 

தலைப்பு 3: “எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் என்பது மண்ணின் இசை வரலாறு!”: இயக்குநர் சீனு ராமசாமி

 

@@@@@@@@@@@@@@@@@@@

 

“ஈழத்து மெல்லிசை மன்னர்” என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது.

 

இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்வில், திருச்சி சிவா (மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:

 

” நம் தொப்புள்கொடி உறவான ஈழத்து மண்ணிலிருந்து வந்து, இசை உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரு மாமனிதரான எம்.பி. பரமேஷ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழின் பெருமையையும், மெல்லிசையின் இனிமையையும் கட்டிக்காத்தவர். அவரது வரிகளும், குரல் வளமும் அவரது மெட்டுகளும் தொடாத இதயங்கள் இல்லை.

 

இன்று அவரது குடும்பம் இங்கே ஒன்றுகூடியிருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

 

அவர், 60 வருடகாலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல; அது ஒரு தவம்.

 

எம்.பி. பரமேஷ் அவர்கள் இன்னும் நூறாண்டுகள் கடந்து தனது இசைச் சேவையைத் தொடர வேண்டும் ” என்றார்.

 

தனது இசையால் தன் காதலி சிவமாலினியின் மனதை களவெடுத்த கள்ளன் இந்த m.p. பரமேஷ் என்று புன்னகையுடன் சொன்னார்.

 

இந்த தம்பதிகளின் இசை வாரிசான மகள் பிரபாலினியின் பேச்சையும், பாடியதையும் சொல்லி பாராட்டினார், ஒவ்வொரு தாய் தந்தையினருங்கும் இப்படி ஒரு மகள் தேவை என்று பாராட்டினார்.

trichy siva, Seenu ramaswamy,

தொடர்ந்து இந்தித் திரைப்பட பாடல்களும் தனக்குப் பிடிக்கும் என்றார். கூட்டத்துக்கு வந்திருந்த பலர், அவரை இந்தி பாடல் பாடும்படி கூறினர்.

 

அவர், “தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால் மொழி பார்ப்பதில்லை.

லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட இந்தி கலைஞர்களை நான் அங்கீகரிக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் நமது பி.சுசீலா என்கிற அற்புத பாடகியை அவர்கள் ஏற்பதில்லை” என்றார்.

 

தொடர்ந்து, கொடிமலர் படத்தில், எம்.எஸ்.வி. இசையில் .பி. சீனிவாஸ் பாடிய “மவுனமே பார்வையாய்..” என்ற பாடலை பாடி அசத்தினார் திருச்சி சிவா.

 

 

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது:

 

” ‘ஈழத்து மெல்லிசை மன்னர்’ எம்.பி. பரமேஷ் ஐயா அவர்களின் இசைப் பயணம் ஒரு மண்ணின் இசை வரலாறு. பொதுவாக ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் ஒரு பத்தாண்டுகள் புகழுடன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால், தொடர்ந்து அறுபது ஆண்டுகள் இசையோடு பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல.

 

இன்றைய நவீன காலத்தில் இசை எவ்வளவு மாறினாலும், மெல்லிசையையும் ராகங்களையும் அடிப்படையாகக் கொண்ட இசை எப்போதும் அழிவதில்லை. அந்த இசையைக் கட்டிக்காக்கும் ஒரு தூணாகப் பரமேஷ் ஐயா விளங்குகிறார்.

 

இந்த முப்பெரும் விழாவை இவ்வளவு நேர்த்தியாக ஏற்பாடு செய்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாகப் பிரபாலினி பிரபாகரன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.”

 

 

இலங்கையின் மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் பேசியதாவது:

“இலங்கையின் ஒரு சிறிய கிராமத்தில், இசையின் மீது கொண்ட காதலால் எனது பயணத்தைத் தொடங்கினேன். காலச் சூழலால் புலம்பெயர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்குச் சென்றாலும், என் தமிழ் இசையை நான் ஒருபோதும் கைவிடவில்லை.

 

இன்று மதிப்பிற்குரிய திருச்சி சிவா அவர்கள், இயக்குனர் திரு.சீனு ராமசாமி மற்றும் இவ்வளவு திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் எனது அறுபது ஆண்டுச் சேவையைக் கௌரவிப்பது எனக்குப் பெரும் நெகிழ்ச்சியைத் தருகிறது.

 

இந்த முப்பெரும் விழா நடப்பதற்குக் காரணமான எனது குடும்பத்தினருக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்..”

 

பிரபாலினி பிரபாகரன் பேசியதாவது:

 

“இந்த மேடையில் இன்று எனது தந்தை அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகளாக எனக்குப் பெருமையாகவும், மிகுந்த நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

 

அவர் எப்போதுமே தன்னைத் தற்காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால்தான், இன்று இந்தப் பொற்காலத்திலும் ‘நவீனப் பாடல்களை அவரால் உருவாக்க முடிந்தது.

 

எனது தாத்தாவுன் நினைவு மலரை மறுபதிவு செய்துருக்கிறார் எனது அப்பா. அப்பாவின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தை பாராட்ட நானும் என் சகோதர்ர்களும் சேர்ந்து இன்று இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.

 

இந்த விழாவிற்கு அழைத்தவுடன், மிகுந்த அன்புடன் இசைந்து வந்து, எங்களை வாழ்த்திய மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களுக்கும், எனது அன்பிற்குரிய இயக்குநர் திரு சீனு ராமசாமி அவர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.

 

அப்பாவை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக, இந்த நிகழ்வை உலகெங்கும் கொண்டு சேர்க்க வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்குப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அப்பா.. உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளைக் கடந்து ஒலிக்க வேண்டும். உங்களின் மகளாக இந்த விழாவை ஒருங்கிணைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!”