Take a fresh look at your lifestyle.

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் ரத்னம்.. விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.!!

111

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளம்பி வருகிறது ரத்னம் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியாகி உள்ள திரைப்படம் ரத்னம். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.

6 முதல் 60 வயது வரை என அனைவரும் கொண்டாடும் வகையில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது.
அந்த வரிசையில் ரத்னம் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. விஷாலின் திரைப்பயணத்தை ரத்னம் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்லும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.