Take a fresh look at your lifestyle.

டூரிஸ்ட் ஃபேமிலி – திரை விமர்சனம்

78

சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. 

ஒரு படத்திற்கு தலைப்பு மிக முக்கியம். அந்த தலைப்பு சிறப்பாக அமைந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் .அந்த விஷயத்தை நன்கு உணர்ந்து இந்தப் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்,இயக்குனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வருகின்ற ஒரு குடும்பம் தமிழகத்தில் படும் பாட்டை சிறப்பாக சொல்லி இருக்கிறார், இயக்குனர்.

ராமேஸ்வரத்திற்கு கள்ளத் துணியில் வந்து போலீஸிடம் மாட்டிக் கொண்டு அங்கிருந்து தம்பி தன்னுடைய மைத்துனர் யோகி பாபு கரம் பிடிக்கும் வரை சசிகுமார் அவரது குடும்பத்தினர் அனைவரும் தங்களுடைய முகத்தில் கலக்கத்தை காட்டி கண்ணீரை வரவழைக்கின்றனர்.

சசிகுமார் ,மலையாள, ஹிந்தி போன்ற படங்களில் விருது பெற்ற நடிகர்கள் போல் மிக எதார்த்தமாக பாத்திரத்தை உணர்ந்து எம்மை அளவு கூட அதை தாண்டாமல் அற்புதமாக நடித்திருக்கிறார். இயல்பாகவும் குடும்பத் தலைவனாகவும் தன்னுடைய நடிப்பால் பாத்திரத்திற்கு மெருகேற்று இருக்கும் சசிகுமாரை பாராட்டலாம்.

அதேபோல் சசிக்குமாரின் மனைவியாகவும் ஆழ்ந்த தெருவாசிகளாக பாஸ்கர் உட்பட பலரும் மிகச் சிறப்பாக தங்களுடைய வேலையை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் இளைஞராக இருப்பினும் ஒரு கனமான குடும்பக்கதையை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இலங்கை அகதிகள் கதைக்களத்தை எதார்த்தமாக இந்த படத்தில் காட்டி இருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் எடிட்டர் மூவரும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இந்தப் படத்தினுடைய கதைகளம் இலங்கை அகதியை பற்றியதாக இருப்பதால் எந்த நேரத்தில் இது அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை தொடவில்லை. இதே கதை 20 ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்தால் இது ஒரு 200 நாள் படமாக இருந்திருக்கும். எதை எப்படியோ சிறப்பான படத்தை தந்த குழுவினருக்கு நம்முடைய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் இந்த படத்திற்கு பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் தரலாம்