லவ் மேரேஜ்-
நடிகர்கள்
விக்ரம் பிரபு – இராமச்சந்திரன்
சுஷ்மிதா பட் அம்பிகா
மீனாட்சி தினேஷ் – ராதா
சத்யராஜ் – MLA
ரமேஷ் திலக் குரு
கஜராஜ் – ராமின் அப்பா
அருள்தாஸ் -ராமின் மாமா
படக்குழு
இயக்குநர் – சண்முக பிரியன்
ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்
படத்தொகுப்பாளர் – பரத் விக்ரமன்
இசை- ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் மோகன் ராஜன் & ஷான் ரோல்டன்
– ASSURE FILMS & RISE EAST
தயாரிப்பாளர்கள் – DR.சுவேதா ஸ்ரீ & ஸ்ரீநிதி சாகர்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
லாக் டவுன் நேரத்தில் யோசிக்க பட்ட கதை. ரொம்ப தள்ளி வந்து விட்டது.
36 வயதிலும் கல்யாணம் ஆகாத ஒரு பையனுக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பார்க்க பஸ்ஸில் வருகிறார்கள். அப்படியே நிச்சயமும் செய்துவிட்டு இரவு ஊருக்கு திரும்ப பஸ்ஸில் ஏறுகிறார்கள் பஸ் ரிப்பேர் ஆகிவிடுகிறது இரவு அந்த பெண் தங்கி விடுகிறார்கள். அந்த நேரத்தில் லாக் டவுன் அமலுக்கு வருகிறது பெண் வீட்டிலேயே பல நாட்டு தங்கி விடுகிறார்கள் இந்த திருமணம் நடந்ததா என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை
விக்ரம் பிரபு இந்த படத்தின் கதை நாயகனாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் ஏதோ கடமைக்கு வந்து போகிறார் .அவங்க தாத்தா பெரிய நடிகர் சிவாஜி . அவர் பெயரை காப்பாற்ற வேண்டாமா? கொஞ்சம் படிங்க பாஸ்…
கதாநாயகியாக சுஷ்மிதா பட் அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை அவரும் அதை பற்றி கவலைப்படாமல் வந்து போகிறார் தங்கையாக மீனாட்சி நடித்திருக்கிறார் துறுதுறு பெண்ணாக வந்து தனது வேலையை சிறப்பாக செய்து கவர்கிறார்.
திருமண வீட்டில் அருள் தாஸ் பண்ணும் வில்லத்தனங்கள்… கோபித்துக் கொள்வது எடுத்து எரிந்து பேசுவது எல்லாம் கொஞ்சம் ஓவர்.
டைரக்டர் சண்முகப்ரியன் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல முயற்சி செய்து இருக்கிறார். மணமகள் வீட்டை விட்டு ஓடி விட்டால் அவரின் தங்கையை திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை நடுரோட்டில் முடிவு செய்வர் அந்த விஷயத்தை வீட்டிலேயே செய்திருக்கலாமே. சத்யராஜ் எம்எல்ஏவாக மினி லாரியில் ஏற்றிவிட்டு அலப்பறை என்ற பெயரில் காமெடி பண்ணுகிறார்… நம்பும்படி இல்லையென்றாலும் பரவாயில்லை…
பஸ் ரிப்பேர் ஆகி வீட்டிலேயே தங்குவது திடீரென்று லாக்டவுன் வரைவது வீட்டை விட்டு வெளியேறி ரோட்டிலே திருமணத்தை கதாநாயகன் முடிவு செய்வது போன்ற பல காட்சிகள் நம்பும் படியாக திரைக்கதை அமைக்க முடியாமல் இயக்குனர் திணறி இருக்கிறார். காமெடி யாக படத்தைக் கொண்டு போக நினைத்து பல இடங்களில் எரிச்சல் மூட்டி இருக்கிறார் டைரக்டர்.
அந்த காலத்து விசு,டிபி கஜேந்திரன், ராமநாராயணன் படம் மாதிரி இந்த காலத்தில் பண்ணுவார்களா?
இந்த படத்திற்கு
2.5/10 மார்க்.