Take a fresh look at your lifestyle.

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

224

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் .அவருக்கு வயது 46. அவருடைய மறைவுச் செய்தி அறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு இளம் வயதிலேயே அவர் காலமாகிவிட்டது பெரும் சோகமாகிவிட்டது

சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் பெருங்குடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் உயிர் காக்கும் சிகிச்சை பெற்று வந்தார் சென்னையில் படபிடிப்பு கலந்து கொண்ட போது மயங்கி விழுந்ததால் நீர்ச்சத்து குறைபாடு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்க அவருடைய நகைச்சுவை நடிப்பால் விஜய் அஜித் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்,ரோபோ சங்கர்.

ரோபோ சங்கர் உடல் நாளை வளரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

ரோபோ சங்கர் இறந்த செய்தி அறிந்து முதல்வர், கமலஹாசன் , தமிழிசை,வெங்கட் பிரபு உட்பட பல திரையுலகினர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்