Take a fresh look at your lifestyle.

அசத்திய ராஜமவுலி, வாரணாசி பட தொடக்க விழாவில் தடைகள்

5

சென்னை டு ஹைதராபாத். வாரணாசி பட பஸ்ட் லுக் வெளியிட்டுக்கு டைரக்டர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபு அழைப்பின் பேரில் மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அழைத்து சென்றார். இந்த பயணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்ட அந்த விழா எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டிரைலர் வெளியிடும்போது 150 க்கு 150 அடி நீளமுள்ள பிரம்மாண்ட திரை அமைத்திருந்தார்கள். அதில் ப்ளே ஆக சில கோளாறுகளை சந்தித்ததால் ராஜமவுலி மனமுடையாமல் மூன்று நான்கு முறை முயற்சி செய்து, அந்த திரையில் காட்டி வெற்றி பெற்றார். இந்தியாவில் இது முதன்முறை என்று அவர் சொன்னது உண்மையிலேயே பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. எனக்கு தெரிந்து இந்திய திரை உலகில் இப்படி ஒரு விழாவை நான் கண்டதும் இல்லை பார்த்ததும் இல்லை கலந்து கொண்டதும் இல்லை. ஒருவனுடைய சிந்தனை எந்த அளவுக்கு உயர்வாக இருக்கிறது என்பதற்கு இந்த விழா உதாரணமாக இருந்தது. அதே நேரத்தில் ராஜமவுலி பேச வந்ததும் போலீஸ் கமிஷனருக்கு முதலில் நன்றி தெரிவித்த பாங்கு பாராட்டும்படி அமைந்தது.நம்மூரில் பத்தாயிரம் பேர் கூடிய இடத்தில் 50 பேரை பலி கொடுக்கும் நடிகர்களும் தலைவர்களும் இருக்கிறோம். 50,000 க்கும் மேற்பட்டவர்களை கூட்டி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடத்திக் காட்டிய ராஜமவுலி- மகேஷ் பாபுவை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் மகேஷ்பாபு வரும் பொழுது காளை வாகனத்தில் அவர் வந்து இறங்குவது போல் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உண்மையிலேயே பிரமிக்கும்படி இருந்தது என்றே சொல்ல வேண்டும் .மக்கள் தொடர்பாளர் யுவராஜ், ஹைதராபாத் சென்று வர விமான பயணம் மட்டுமல்லாமல் தங்குவதற்கு பார்க் ஹயாத்தில் ஏற்பாடு செய்து இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் பண்ண வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஹைதராபாத்தில் சார்மினாரையும் முகல் பிரியாணியையும் காட்டி அசத்திய தம்பி யுவராஜ் பணி பாராட்டும்படி அமைந்திருந்தது. யுவராஜ் – வாரணாசி பட குழு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்🌹

#Rajamouli #maheshbabu #rojatamiltv #tollywood #kollywoodcinema #tamilcinema

 

https://www.facebook.com/share/r/1EgX1aZWfM/