Take a fresh look at your lifestyle.

கருப்பு பல்சர் பட விமர்சனம்

5

கருப்பு பல்சர்

பெயரைப் பார்த்ததும் இளைஞர்களை சுண்டி இழுக்க வைத்திருப்பது அப்பட்டமாக புரிகிறது ?இதற்கு ஏற்றார் போல் படம் இருக்கிறதா? வாங்க பார்ப்போம்…

ஜல்லிக்கட்டில் காளை மாட்டை போட்டிக்கு விடும் ஒரு கந்துவட்டிக்காரர் கனவில் ,ஒரு காளை மாடு உருமிக் கொண்டு வருகிறது. அந்த கந்துவட்டி பைனான்சியர் பல்சரில் செல்லும் ஜோடி இறந்து விடுகிறது. உடனே அவர் அந்த பல்சரை விற்று விட துடிக்கிறார். அந்த நேரம் பார்த்து வாட்டர் கேன் வியாபாரி அலட்டல் மன்சூர் அலிகான் அவரிடம் கடன் வாங்க வருகிறார்.5 லட்சம் கடனையும் கொடுத்து, அந்த பல்சரையும் எடுத்துப் போகச் சொல்கிறார்.மன்சூரலிகான் கேட்டவுடன் கடன் கொடுத்தவன் கொடுக்கும் பல்சரை எடுத்துக் கொண்டு ஊருக்கு போகிறார். கூடவே கந்துவட்டி காரரர் தன் கைத்தடி பையனையும் வேலைக்கு வைத்துக் கொள்ள அனுப்புகிறார். அந்த பல்சர் ஒரு நாள் கந்து வட்டிக்காரர் கைத்தடி பையனை விரட்டி விரட்டி கொன்று விடுகிறது.உடனே பயந்து போன மன்சூர் அலிகான்  அந்த பல்சரை விற்று விட துடிக்கிறார், ஆர் ஓ வாட்டர் மிஷின் வியாபாரம் செய்யும் ஒரு பையன் அந்த கருப்பு பல்சரை கேட்டு வருகிறார்.கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு தள்ளி விடுகிறார். காதலி விருப்பப்பட்டு கருப்பு பல்சர் கேட்டதற்காக அதை வாங்கி வந்து அவரை ஏற்றி செல்கிறார் அந்த ஆர்வோ வாட்டர் மிஷின் வியாபாரம் செய்யும் பையன். இருவரும் வழியில் விபத்துக்குள்ளாகி விழுந்து விடுகிறார்கள்.இதே கருப்பு பலசரில் பிரிதொரு முறை இந்த ஜோடியின் நண்பர் தனது மனைவியுடன் செல்கிறார். அவருக்கும் விபத்து நிகழ்கிறது. ஏன் இந்த விபத்து நிகழ்கிறது -எதற்காக இப்படி ஆகிறது என்பது மர்மமாக இருக்கிறது. அது என்ன மர்மம் என்பதுதான் படத்தின் அவிழ்க்க வேண்டிய முடிச்சு.

இந்தப் படத்தில் இந்த ஆர்ஓ மிஷின் விற்கும் பையனாகவும் -ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் இளைஞனாகவும் அட்டக்கத்தி தினேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல எல்லா படங்களிலும் அலட்டல் இல்லாத நடிப்பு என்ற பெயரில் முக பாவங்களை உடல் மொழியை காட்டாமல் படம் போல் வந்து போகும் பாணியில் இதிலும் நடித்திருக்கிறார். கொஞ்சம் நடிங்க தினேஷ்.

தினேஷுக்கு இரண்டு கதாநாயகிகள் காதலியாக வரும் கதாநாயகி துடுக்குத்தனமாக வெடுக்கெடுக்கென்று பேசி நடித்திருக்கிறார்.

மன்சூர் அலிகான் உட்பட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அலட்டலோடு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை பணி செய்த இருவரும் உணர்ந்து உழைத்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸில் இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை டைரக்டர் அமானுஷ்ய சக்தி கலந்து சொல்லி இருக்கிறார். அதில் இஸ்லாமிய மதத்தினரையும் திருப்தி படுத்துவது போல் காட்டி இருக்கிறார்.அது கொஞ்சம் நெருடலாக உள்ளது .காளை ஈசனின் வாகனம் .அந்த ஈசனே வந்து இறந்தவர்களுக்கு உதவுவது போல் காட்டி இருந்தால். இன்னும் சிறப்பாக படம் இருந்திருக்கும். போலிஸ் ஆபிசர் நீ யார் தெரியுமா என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து பிளாஷ்பேக் சொல்வது நம்பும்படியாக இல்லை.

இந்தப் படத்திற்கு மார்க் 3/5

*CAST & CREW OF KARUPPU PULSAR*

*CAST :*

Hero – *ATTA KATHI DINESH*
Heroine – *RESHMA VENKATESH*
Heroine – *MADHUNIKA*
Actor – *MANSOOR ALIKHAN*
Actor – *SARAVANA SUBAIYA*
Actor – *KALAIARASAN KANNUSAMY*

*CREW :*

DIRECTOR, WRITER : *MURALI KRISH S*

PRODUCTION HOUSE : YASHO ENTERTAINMENT, DR MURALI KRISHNAN

MUSIC & Lyrics : INBAA

DOP : BASKAR ARUMUGAM

EDITOR : SASI DHAKSHA

STUNT : RAMESH MASTER

ART DRECTOR : SOUNDHAR

CHOREOGRAPHY : SHIVA

EXCUTIVE PRODUCER : KV. TAMILARASU

PRO P.THYAGARAJAN
PRO : R. MANIMADHAN