Take a fresh look at your lifestyle.

கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் கொண்டாடுவதற்காக ப்ரைம் வீடியோவில் அருண் விஜய் மற்றும் அவரது வாரிசான ஆர்ணவ் விஜய் நடிப்பில் வெளியாகும் ‘ஓ மை டாக்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை அருண்விஜய் பகிர்கிறார்.

136

‘ஓ மை டாக்’ படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த திரைப்படம் அர்ஜுன் என்ற குழந்தைக்கும், சிம்பா என்ற நாய்க்குட்டிக்கு இடையேயான உணர்வுபூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பிடித்த ஆர்ணவ் விஜய் மற்றும் சிம்பா என்ற நாய்க்குட்டி என இரண்டும் திரையிலும், திரைக்குப் பின்னாலும் இவர்களுக்கு இடையேயான அன்பையும், பிணைப்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஆர்ணவ் விஜய்யின் தந்தையான அருண் விஜய் இப்படி விவரிக்கிறார்,” செல்ல பிராணியான சிம்பா முதல் நாளே ஆர்ணவ்வை கீறி விட்டது. ஆனால் அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு படப்பிடிப்பை தொடர்ந்தார்” .

அருண் விஜய் இது தொடர்பாக மேலும் பேசுகையில், ” அது ஆர்ணவ்வின் உலகம். சிம்பா நன்கு வளர்ந்தவர். இரண்டு மூன்று குட்டிகளுடன் வளர்ந்து கொண்டிருந்ததால் எங்களிடம் வந்தன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது வெவ்வேறு குட்டிகள் வளர்ந்து வருவதால், அவற்றினோடும் படப்பிடிப்பில் நடிக்க வேண்டியிருந்தது. நாய்க்குட்டிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவற்றில் சில நாய்க்குட்டி ஆர்ணவ்வை கடிக்கத் தொடங்கியது. அவை சிறிய குட்டிகள் என்பதால் அவை கடிக்கின்றனவா? இல்லையா? என்பது கூட தெரியாது. சில குட்டிகள் கூர்மையான பற்களால் கடிக்கத் தொடங்கியது. ஆனால் அதனை ஆர்ணவ் சரியாக எதிர்கொண்டார். கைகளில் ஏற்படும் கீறல்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அது சிறிய காயம் என்று அவர் கூறினார். பிறகு அவரை கைகளை சானிடைசரை கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டு நடித்தார். ஏனெனில் அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த விசயம் அந்த தருணத்தில் அவனுக்கு உதவியது. படத்தில் ஆர்ணவ்வுடன் நாய்க்கும் இருக்கும் தொடர்பு உண்மையாக இருந்தது. அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் விரும்பினார்.” என்றார்.

‘ஓ மை டாக்’ ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை ஒன்றாக ஒன்றிணைத்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் தாத்தா- தந்தை- மகன் என மூவரும் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய் முதல் முறையாக திரையில் தோன்றுகிறார்கள். இவர்களுடன் மகிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்தில் அமேசான் ஒரிஜினல் திரைப்படமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.