







லைக்கா பட நிறுவனத்திடம் நடிகர் விஷால் 21 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது இந்த கடனை திருப்பித் தரவில்லை என்று லைக்கா நிறுவனம் விஷால் மீது லைட்டாநிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.
அந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது, லைக்கா நிறுவனம் மேல் முறையீட்டுக்கு சென்று விட்டதால் ஆறு மாதம் ஆனாலும் பணத்தை செலுத்த முடியாது என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இதற்கு நீதிபதி உங்கள் திரை வாழ்க்கை முடிந்து விட்டதா என்று வினா எழுப்பி உள்ளார் மீண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது உங்கள் சொத்து விவரங்களை தெரிவியுங்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது விஷாலுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம், விஷால் தவறாக வழி நடத்தும் அவரது பிஆர்ஓவும் மேனஜரும் தான் என்று சொல்லப்படுகிறது.
அன்பு செழியனிடம் 21 கோடி ரூபாய் விஷால் கடன் பெற்றிருக்கிறார். அந்தக் கடனை திருப்பி செலுத்தினால் தான் வீரமே வாகை சூடவா படத்தை வெளியிட முடியும் என்ற ஒரு நிலை விஷாலுக்கு ஏற்பட்டது. அதற்காக அவரது கடனை லைக்கா நிறுவனம் அடைத்தது. அந்தப் பணத்தை விஷால் திருப்பித் தரவில்லை என்று நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.