







பிரமாஸ்திரா, கணம் படங்கள் ப்ளாப்.தயாரிப்பாளர் தலையில் துண்டு
கணவன் நடித்த பிரம்மாஸ்திரா மனைவி நடித்த கணம் இரண்டும் அவுட்
தெலுங்கு திரைப்பட உலகில் காதல் மனம் புரிந்த நட்சத்திர தம்பதிகள் நாகார்ஜுனா அமலா. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. அமலா கிட்டதட்ட 27 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் கணம் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அந்தப் பட பிரமோஷனில் கலந்துகொண்ட அமலா கணவர் நடித்த பிரம்மாஸ்திர ா, நடித்த கணம் ஒரே நாளில் வெளியாவது வருத்தமாக இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார் .410 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது, பிரம்மாஸ்திரா. இந்தப்படம் கணம் நேற்று வெளியாகியது. இரண்டு படமும் படு டப்பாவாகிவிட்டது. கணம் படத்தை பார்க்க ஒரு ஷோவுக்கு 20 பேர் கூட வருவது கஷ்டமாக இருக்கிறதாம். அதேபோல் பிரம்மாஸ்திரா படமும் 10 15 பேருடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியாகி ஒரே அடியாக அவுட் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கனம் படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. பிரம்மாஸ்திரா படம் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டது. இந்த பிரம்மாஸ்திரா படம் ஏற்கனவே நம்ம ஊர் தூர்தர்ஷனில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்பு பெற்ற புராண சீரியலில் ஒரு சதவீதம் கூட அந்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆகையினால் கணவன் மனைவி அமலா நாகார்ஜுனா இருவரும் சோகத்தில் இருப்பதாக தெலுங்கு, திரை உலகினார் பேசிக் கொள்கிறார்கள்.