Take a fresh look at your lifestyle.

இசையமைப்பாளர் சைமன் கே கிங் கொலைகாரன் படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்

109


‘கொலைக்காரன்’, ‘கபடதாரி’, ‘சத்யா’ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க BGMகள் மற்றும் பாடல்களை தன்வசமாக்கினார்  இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த படைப்புகளில் ஒன்றை நமக்குக் கொண்டுவருகிறார். ‘கொலைகாரன்’ திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் புதியதோர் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த டைனமிக் ஜோடி, தங்களின் வரவிருக்கும் அமேசான் பிரைம் திரில்லர் தொடரான ‘வதந்தி’ மூலம் நம் அனைவரையும் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கப் போவது உறுதி.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிருத்திகா உதயநிதிக்காக ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெற்றிகரமான வலைத் தொடரில் பணியாற்றினார். தற்பொழுது அவர் புஷ்கர் & காயத்திரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ எனும் திரைப்படத்தில் தான் பணியாற்றுவதனை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும்  பகிர்ந்துள்ளார்.