Take a fresh look at your lifestyle.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

84

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.
அவர்களுடன் இந்தத் தொடரில் திறமை மிக்க நடிகர்களான ராஷி கண்ணா, கே.கே. மேனன், புவன் அரோரா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . D2R ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவான ‘ஃபார்ஸி’ வலைதளத் தொடர், பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படும். சீதா ஆர். மேனன் மற்றும் சுமன் குமார் ஆகிய இருவரும், ராஜ் & டிகே வுடன் இணைந்து , ‘ஃபார்ஸி’ தொடருக்கான கதையை எழுதியுள்ளனர்.

ஒரு கச்சிதமான மோசடியை செயல்படுத்தி அதில் பயணிக்கும் சன்னி, திடீரென தான் ஒரு இருண்ட பகுதிக்குள் நுழைகிறோம் என்பதை உணர்கிறான். அதிகம் அறியப்படாத ஒரு ‘காமன் மேன்’ உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது . இருப்பினும் அவனால் தேசத்துக்கு விளையக்கூடிய ஆபத்துக்களை களைந்தே தீருவது என்ற குறிக்கோளுடன், வழக்கத்துக்கு மாறாக செயல்படும் அனல் தெறிக்கும் மிடுக்கான ஒரு அதிரடிப்படை அதிகாரியாக (மக்கள் செல்வன் விஜய் சேதுபதி) வலம் வருகிறார். இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே‌ வின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ‘ஃபார்ஸி’ எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடராக உருவாகி இருக்கிறது. அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான அதிரடிக்காட்சிகளுடன், செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும், ஒரு தெருக் கலைஞனை சுற்றி கதைப் பின்னப்பட்டிருக்கிறது .

இவ்விழாவினில்
சுஷாந்த், பிரைம் வீடியோ கூறியாதாவது..
” பிரைம் வீடியோ ஒவ்வொரு முறையும் மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்து வருகிறது. இந்த முறை வித்தியசமான, உங்கள் எல்லோரையும் ரசிக்க வைக்க கூடிய, உங்களை கட்டி போடக்கூடிய ஒரு தொடரை, பிரம்மாண்டமான முறையில் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். பிரைம் வீடியோ, கதை சொல்லிகளின் உலகமாக செயல்பட்டு வருகிறது. எல்லைகளை தாண்டிய கதையை சொல்ல நாங்கள் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் கதைகளை 240 நாடுகளுக்கு மேல் கொண்டு செல்கிறோம். இந்த ‘ஃபார்ஸி’ தொடரில் ராஜ், டிகே எனும் இரண்டு சிறப்பான கதைசொல்லிகளுடன், ஷாஹித் கபூர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா போன்ற பல நடிகர்களை இணைத்து நாங்கள் சிறப்பான தொடரை உருவாக்கியுள்ளாம். நன்றி.” என்றார்.

அபர்ணா, பிரைம் வீடியோ கூறியதாவது..,

”சிறந்த கதைகளில் தான் ஒரு தொடரின் வெற்றி ஆரம்பமாகிறது. இந்த வித்தியாசமான, கேளிக்கை நிறைந்த கதை, மிடில் கிளாஸ் மக்களின் கனவை கூற வருகிறது. பல சிறப்பான நடிகர்கள் இந்த கதையை மேம்படுத்தி, சிறப்பான தொடரை உருவாக்க உதவியுள்ளனர். இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே வின் கற்பனையான படைப்புத்திறன் எண்ணத்திற்கு, எழுத்தாளர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். நன்றி.” என்றார்.

இயக்குநர் ராஜ் கூறியதாவது..,

“இந்த தொடர் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது. கோவிட் காலத்தில் இதை நாங்கள் படமாக்கினோம். அதில் சில சிக்கல்கள் இருந்தது, அதை தாண்டி இதை நாங்கள் உருவாக்கினோம். நமக்குள் இருக்கும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் இந்த தொடர் உருவாக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த கதை பிரதிபலிக்கும். தொடரை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை கூறுங்கள். நன்றி.” என்றார்.

இயக்குநர் டிகே கூறியதாவது.,

”இந்த கதை நீண்ட காலமாக எங்களிடம் இருந்தது. எழுத்தாளர்கள் எங்களுடன் இணைந்து, மக்களுடன் எளிதாக தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதையை எழுதியுள்ளார்கள். அனைவரது கூட்டு முயற்சி தான் இந்த தொடர். உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த தொடர் இருக்கும்.” என்றார்.

நடிகர் ஷாஹித் கபூர் கூறியதாவது..,

”இந்த ஆண்டை ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடர் மூலம் துவங்குவது மகிழ்ச்சி. இப்போது அனைவரும் ஓடிடி எனும் டிஜிட்டல் தளங்களை ஒரு முக்கிய அங்கமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நேரத்தில் ‘ஃபேமிலி மேன்’ எனும் வெற்றி பெற்ற தொடரை இயக்கிய கூட்டணி என்னை அழைத்தது, எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் எந்த தயக்கமும் இல்லாமல், ஓடிடியில் இணைய நானும் தயாராகிவிட்டேன். அவர்கள் இந்த கதையை ஒரு கூட்டணியாக இணைந்து அதிக கவனத்துடன் உருவாக்கி உள்ளனர். கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் சிறப்பான வடிவில் வந்துள்ளது. ‘மக்கள் செல்வன்’ என்ற பெயருக்கு பொருத்தமானவர் தான் விஜய் சேதுபதி. அவர் இதயபூர்வமான நடிகர், அவரிடமிருந்து நிறைய கற்று கொள்ள விருப்பப்படுகிறேன். அவர் சிறப்பான பணியை இந்த தொடருக்காக கொடுத்துள்ளார். தொடரில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். பிரைம் வீடியோ உடன் இணைந்தது மகிழ்ச்சி. நன்றி. ” என்றார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூறியதாவது..,

” குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. தொடர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.”என்றார்.

ராஷி கண்ணா கூறியதாவது..,

”வெப் சீரிஸ்ஸை உருவாக்குவதில் ஏற்கனவே வெற்றி கண்டவர்கள் ராஜ் மற்றும் டிகே. அவர்கள் இந்த தொடரை இயக்கும் போது, இது ஒரு முழுமையான தொடராக இருந்தது. இந்த தொடரில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த நடிகருடன், நடிப்பதே மிகச்சிறந்த அனுபவம். ஷாஹித் கபூர் இந்த தொடரில் வித்தியாசமான கதாபத்திரத்தில் காட்சியளிப்பார். அனைத்து பெண்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய கதாபாத்திரமாக இந்த கதாபாத்திரம் இருக்கும். ஆண்கள் நிறைந்திருக்கும் இந்த சமூகத்தில் ஒரு பெண் அடையும் வெற்றியை.., இந்த தொடரில் நீங்கள் பார்க்கலாம். அனைவரும் ரசிக்கும் படியான ஒரு தொடராக இந்த தொடர் இருக்கும்.” என்றார்.