







குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ட்ரிக்கர்.
குழந்தைகளை ஏன் கடத்துகிறார்கள்? எதற்காக கடத்துகிறார்கள் என்பதுதான் படத்தினுடைய முழு கதை. அதை எப்படி போலீஸ் ஆபீஸர் கண்டுபிடித்து முறியடிக்கிறார் என்கிற போலீசு கதை இது.
போலீசாக வேலை பார்த்த தனது அப்பா மீது களங்கம் சுமத்தப்படுகிறது. அந்த களங்கத்தை அதர்வா என்கிற இந்த மகன் வளர்ந்து போலீசாகி துடைக்க சபதம் எடுக்கிறார்.
போலீசில் சேர்ந்து வேலை பார்க்கும் போது அதர்வாவை சஸ்பெண்ட் செய்து விடுகிறார்கள். சஸ்பெண்ட் ஆன அதர்வாவை போலீஸ் கமிஷனர் அழகன் பெருமாள் காரில் அழைத்துக் கொண்டு, ஒரு பழைய கால ஹோட்டலுக்கு வருகிறார் அங்கே முனீஸ் காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காட்டி கமிஷனர் அழகன் பெருமாள் ‘இவர்களும் நம்ம டிபார்ட்மெண்டில் இருந்து சஸ்பெண்ட் ஆனவர்கள் தான். இவங்க எல்லோருக்கும் சாதாரண உடையில் வேலை பார்க்கும் போலீஸ் வேலை கொடுத்து இருக்கோம். நீ அவங்களோட சேர்ந்து கொள்.ஒரு அசைன்மென்ட் கொடுக்கிறேன் .அதை சாதாரண பொது ஜனமாக இருக்கிற மாதிரி இருந்து கண்டுபிடி’ அப்படின்னு கமிஷன் சொல்லிடுறாரு. அந்த வேலை தான் ஒரு ரவுடி கும்பல் குழந்தைகளை கடத்தி விற்கிற விஷயத்தை கையில் எடுத்து, அதர்வா கண்டுபிடிக்கிறார்.
இதற்காக அந்த ஹோட்டலில் ஒரு கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்தி, அதன் மூலம் அதர்வா கண்டுபிடிக்கும் ரூட் புதுமையாக இருந்தது.
வில்லனாக நடித்திருப்பவர் விக்ரம் பட விஜய் சேதுபதியை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறார்.அலட்டி கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
அதர்வாவின் சண்டைக்காட்சி நடிப்பு அசத்தலாக இருக்கிறது. அவருடைய உடல் வாகுக்கு ஏற்ப ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் செம சண்டை காட்சிகளை அமைத்து அசர வைத்துள்ளார்.
கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்.
அருண் பாண்டியன் மறதி நோய் பாதிப்பால் ராக் வந்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்து வைப்பது நல்ல ட்விஸ்ட்.
செட்டுகளையும் சேசிங் ஃபைட்டுகளையும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர்.
பாடல் காட்சிகளை விட ஜிப்ரானின் பின்னணி இசை பயமுறுத்தி இருக்கிறது.
இயக்குனர் சாம் ஒவ்வொரு டேக்குகளையும் யோசித்து யோசித்து அழகுப்படுத்தி இருக்கிறார். ட்ரிக்கர் வித்தியாசமான முயற்சி பாராட்டலாம்.