Take a fresh look at your lifestyle.

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் சமையல் பிரியர்களுக்காக இலவச சமையல் நிகழ்ச்சி

117

பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் நடத்தினார்
–––––––
• இதில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு சமையல் நுட்பங்கள் குறித்து
கற்றுக் கொடுக்கப்பட்டது
• ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்

சென்னை, ஜூன் 10–
வார இறுதி நாளை மகிழ்ச்சியாகவும் ருசியாகவும் கொண்டாடும் வகையில், மிகச்சிறந்த உணவுகளின் அற்புதமான கலவையைக் சென்னை நகர மக்களுக்கு வழங்கும் விதமாக சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில், பிரபல சமையல்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் தலைமையில் சமையல் பயிற்சி நிகழ்ச்சி இன்று (10–ந்தேதி) மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் சஞ்சீவ் கபூர் கூறுகையில் நமது அன்றாட வாழ்க்கை துவக்கமே காலை சமையலறையில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நாம் அனைவரும் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைக்கின்ற உணவே சிறப்பான உணவு.