Take a fresh look at your lifestyle.

*விக்கி நயன் ஜோடி இரட்டை ஆண்குழந்தை பெற்றதில் ஏதேனும் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி*

106

*விக்கி & நயன் ஜோடியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரம் தொடர்பாக டிஎம்எஸ் தலைமையில் விரிவாக அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது*

*5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும்,25 நகர்புற சுகாதார மையமும் கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்*

தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருந்து இருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், 46 சுகாதார மாவட்டங்களை சேர்ந்த சுகாதார இயக்குனர்கள், இனை இயக்குனர்கள், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குனர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதற்கு முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 96% இரண்டாம் தவணை 91% செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். மேலும், அக்டோபர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்த மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக காலம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை வைத்து இருந்தது. அதனால் கையிருப்பில் வைதுள்ளதை கொண்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழகத்தில் தற்போது 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. விரைவில் அவற்றை செலுத்தி முடிக்க வேண்டுமென என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும்,25 நகர்புற சுகாதார மையமும் மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை எங்கு துவங்குவது என்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கபடும் என தெரிவித்த அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 708 நகர்புற சமூகநல மையம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த 20 நாட்களில் 13,178 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது,இந்த முகாம்களில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 351 நபர்கள் பரிசோதனை செய்யபட்டு உள்ளன என தெரிவித்தார்.

தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மருந்துங்கள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது, 32 மருந்து சேமிப்பு கிடங்குகளில் இருந்து இவை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 6 மருந்து கிடங்குகளை அமைக்க வேண்டும் என தலா 5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருந்துகள் இருப்பு தன்மை குறித்து கேட்டறியபட உள்ளன, மருந்து கிடங்குகளில் இருந்து மருந்துகளை வாங்கி வருவதில் உள்ள கால தாமதம் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன என கூறினார்.

நயன்விக்கி விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும், டிஎம்எஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருமுட்டை மற்றும் வாடகை தாய் விதிமுறைகள் ஏதேனும் நயன் விக்கி ஜோடி மீறப்பட்டுள்ளதா என்று அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள், அதன் பின் அறிக்கை சமர்பிக்க உள்ளனர். அதன் பிறகு தேவைப்பட்டால் நயன் விக்கி யிடம் விளக்கம் கேட்கபப்படும் எனவும், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கம் கேட்க அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

பேட்டி – மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்