Take a fresh look at your lifestyle.

ஒழுக்கம் என்பது என்ன ஏன் கடைபிடிக்க வேண்டும்?

229

*ஒழுக்கமும் உயிரும் உடலின் வரலாறு*

*ஒழுக்கம் என்பது என்ன ஏன் கடைபிடிக்க வேண்டும்?*

ஒழுக்கம் என்பது நல் உள்ளம் கொண்டவர் எனில் ஒரு செயலை செய் என கூறும்போது ஏன் எதற்கு எதனால் என கேள்வி எழுப்பாமல் சொல்வதை அப்படியே தவறாமல் செய்வது ஒழுக்கமாகும்…
ஒழுக்கத்தை கையாள சொன்னவரை ஆராய்வது தப்பான பாதைகளாகும்…
ஒழுக்க பாதைகளை ஆசான்கள்
திருத்தம் செய்யும் போது கசப்பு அளவற்று இருப்பதுண்டு…
கசப்பினால் கோபம் வெளிபடுவதுண்டு…

*ஒழுக்கத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும்?*
உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்து மூச்சுகாற்று
(சுவாச நட்டம்)விரையம் ஆகாமல் நோய்கள் இன்றி வாழ்நாட்களை அதிகரிக்கவும்,
படைத்த
பரம்பொருளைக்
காணவும் தான் கற்ற கல்விஅறிவு பலனை பிறர் அடைய வழிகாண கடைபிடிக்க வேண்டும்.

*உடல் தூய்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?*

உடலை தூய்மை செய்ய இரண்டு வேலை குளிப்பதோ ,பல வித இரசாயண சாதனங்களை பயன்படுத்துவதாலோ தூய்மையா எனில் இல்லை…

*சூடான நீரில் உடலை ஐந்து நிமிடம் மேல் அதிகரிக்காமல் குளிப்பது 1/4% சாதாரண தூய்மை முழுமை கிடையாது.*.

உடல் தூய்மையாக இருக்க உணவு ஒழுக்கம் கையாள கற்று கொள்ள வேண்டும்.எந்தமாதிரி உணவுகள் உடலை வளபடுத்தும் என்ற அறிவுகளை அகலபடுத்தி இரண்டு வருட காலம் நல் ஆசான் துணையோடு பழக வேண்டும்.

*உணவுகளை உட்கொள்வதில் மட்டும் உடல் காக்கபடுமா?*
இல்லை.
தனக்கு வரும் நோய்கள் எத்தகையது அதற்கு என்னமாதிரி உணவுகளும் மருந்துகளும் கொடுத்து குணப்படுத்த வேண்டும் எனவும் உடலை நோய் கண்ட காலத்தில் பாதுகாப்பது பற்றிய தெளிவுகளை பெற்றிருக்க வேண்டும்..

*எந்தமாதிரி மருந்துகளை கையாள வேண்டும்?*
சித்தர்கள் கண்டு சொன்ன மருந்துகளை நல் ஆசான் துணையோடு கீழ்படிதலோடு உட்கொண்டு தன் உணவை தன் கைகளால் சமைப்பதும் மருந்துவ முறையில் ரசங்கள்,தேநீர்,பானகம் ,நீர் ஆகாரம் முறைகளை அந்தந்த நாட்களில் ஏற்படும் உடல் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்த அறிந்து செயல்பாட்டில் இருப்பது..

*சித்தர்கள் கூறிய உணவுகள் மருந்துகள் மட்டும் போதுமா?*
இல்லை.
அளவற்று பேசுவதை குறைக்க தந்திரம் அறிவு வேண்டும்….
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம். பேச்சுகள் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு தன் தரத்தை உயர்த்த வேண்டும்…

பிறர் பேசுவதை கேட்க பழக வேண்டும்…
பேச்சுகள் அதிக அளவு சுவாச நட்டத்தை உண்டு செய்யும்…
*இல்லற ஒழுக்கம் கடைபிடிப்பவர் ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் பேசினால்* *ஆயுட்காலத்தில் ஒருமாதம் குறைந்துள்ளதாக நினைத்து* *எச்சரிக்கையோடு இருப்பது உத்தமம்.*

*எவரிடம் பேசுகிறோம்,*
*ஒருமாதம் வாழக்கூடிய* *காலத்தை விரயம் செய்ய கூடிய அளவுக்கு ஒழுக்கமானவரா தகுதி உடையவரா என சிந்திப்பது யாருடைய பொறுப்பு?*

*அக உணவுகளை கொண்டு ஒழுக்கம் கடைபிடிப்பவர் இல்லறத்தார் எனபடுவர்*

உடல் ஒழுக்கங்கள் என்னென்ன முக்கியமானது என அறிந்து செயலில் கடைபிடிக்க வேண்டும்.
ஆசான்களிடம் கற்று தெளிவடைய வேண்டும்.

*உடல் கல்வி கற்பவருக்கு உடை மற்ற ஏதும் அடையாளம் அவசியமா ?*

உடல் கல்வி கற்பவருக்கு அனுபவ செயல்களே அடையாளமாக இருப்பது முதன்மையானது..
முதல் அடையாளம் பேச்சுகள் 80%குறைவாக இருப்பது தென்படும்.
வண்ணங்களற்ற
கதர் துணிகளை பயன்படுத்துவது மிக உயர்ந்தது…
உணவு ஒழுக்கம் உடல் ஒழுக்கம் அறிந்த அனுபவ அறிவு பெற்றவர்கள் மட்டும் பிணி தீர்ந்த முதல் நாட்கள் தொடங்கி கதர் துணிகளை கையாண்டு கொள்வது உத்தமம்..

மற்றவர்கள் உணவு ஒழுக்கம் கையாண்டு உடல் ஒழுக்கம் பயில வேண்டும்…

வண்ண ஆடைகளை அணிந்து கொள்வதாலோ மணி மாலைகளை அணிந்து கொள்வதாலோ அன்னதான பணி செய்வதாலோ,
உருவபடங்கள்,
பொம்மைகளை வழிபடுவதனால்
முழுமை ஆகுமா எனில் இல்லை. ஒழுக்கம் என்பது அவரவர் உடலுக்கும் உயிருக்கு மட்டுமே தவிர படங்களுக்கோ,
பொம்மைகளுக்கோ ,
பிறருக்கு காட்சிபொருளாக காண்பதற்கோ இல்லை…

*உடல் ஒழுக்கம் எத்தனை காலம் பயில வேண்டும்?*
எத்தனை
ஆண்டுகள் என வரையறுக்க முடியாது.சிலர் பிறப்பாலே ஒழுக்கம் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்து இருக்கலாம்…

சிலர் இளம்வயதில் பல ஒழுக்க விதிகளை செயலில் இயல்பாகவே வந்திருக்கலாம்.
சிலருக்கு இடைபட்டகாலத்தில் கற்றுக்க முயலலாம்…
அவரவர் நோய்களின் தன்மை அறிந்து தனக்கு தானே மருத்துவம் பார்கும் தெளிவு பெறும் வரை அவரவர் முயற்சி, பயிற்சி,நம்பிக்கை,
உறுதி பொறுத்து மாறுபட கூடும்…

*உணவு ஒழுக்கம்,உடல்* *ஒழுக்கம் ,பயிற்சி*
*மூன்றும் அறிந்து* *கொண்டால்*
*உடல் கல்வி ஆசான்* *பதவி கிடைக்குமா?*

உடல் கல்வி முழுமை அடைவது பல லட்ச கோடியில் ஒருவருக்கு கிடைப்பதே அரிது..
ஒழுக்க பாதைக்கு தடையாக இருப்பது அளவுகளற்ற உரையாடல்கள்.உடல் ஒழுக்க கல்வி வளர்காதவரிடம் பேசுவது தன் உடலுக்கு கேடுகளை வரவழைக்கு அறிவுகளற்ற செயல்களாகும்….
முயல வேண்டும்.
உணவு ஒழுக்கம் கைகூடுவது எளிதானாலும் உடல் ஒழுக்கம் கைகூடுவது சிரமம் இருந்தாலும் முயலாமல் இருப்பது குற்றமானது…

அன்பும் மன்னிப்பும் நிறைந்தவருக்கு எளிமை ஆகுவது உண்டு..
அன்பும் மன்னிப்பு சரணடைதல் இவைகள் இருப்பின் ஒழுக்க கல்வி எளிது.

*முன்னோர்கள் கூறிய முக்கியமான*
*ஒழுக்கங்கள் கடைபிடிக்கலாமா?*
ஆம் .
பிண உணவை தவிற்தவர்கள் உணவு ஒழுக்கங்கள் கடைபிடிக்காத
திருமண விழாக்கள்,மற்ற பல விசேசங்கள்,பொது கூட்டங்கள்,உணவு ஒழுக்கம் கடைபிடிக்காத மருத்துவமனை,இறப்பு வீடு,
உணவு ஒழுக்கம் இல்லாத உறவுகள் நட்புகள் வீடுகளில் சாப்பிடுவது தங்குவது தவிற்பது உடலை நோய்கள் தாக்குவதை குறைத்துக்கும் வழிகளாகும்…
பத்து நிமிடங்கள் மட்டுமே செலவிடுவது உத்தமம்.

*இல்லற ஒழுக்கம் கடைபிடிப்பவர் கவனத்திற்கு*
கூட்டம் நிறைந்த பயணங்களை மேற்கொள்வது அவசியம் தவிற 80% தவிற்பது உத்தமம்…
சொகுசான இருக்கைகளை பயன் படுத்துவது முடிந்தவரை தவிற்க. *பிறர் பயன்படுத்திய சொகுசு இருக்கை,உறங்க பயன்படுத்தும் மெத்தை,சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்கள்* தவிற்கும் அறிவை 99% வளரக்க வேண்டும்,..,
தனக்கு தானே அடக்கம், கீழ்படிதலோடு இருக்க பழக வேண்டும்…

*மருந்து உணவு சிலகாலம் மட்டுமே உதவும்*.
*செயல்களில் ஒழுக்கம் வந்தால் மட்டுமே உயிரைக் காக்கும் கருவியாக இருக்கும்*

சிங்கைமீனாட்சி
*விழுப்புரம்*