கிஷோர்- கருணாகரன் நடித்த கடிகார மனிதர்கள் படத்தின் மூலம் காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் பிரதீப் ஜோஸ்.கே.
சமூக சேவகரான இவர் கராத்தே வீரராவார். தவிர மாநில அளவிலான பேஸ்கட்பால் விளையாட்டு வீரரும் கூட .
ஷங்கரின் உதவியாளர் அரண் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடித்த ஜிகிரி தோஸ்த் படத்தில் கமாண்டராக ஒரு கனமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இ.பிரகாஷ் இயக்கத்தில் சதீஷ், யோகிபாபு,
பிக்பாஸ் டேனியல், தேவ் சிவகுமார் ஆகியோருடன் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். இப்படங்கள் திரைக்கு வர தயாராகின்றன. இதன் மூலம்
பிரதீப் ஜோஷ்.கே
தமிழ் திரை உலகினரின் பார்வையும் ரசிகர்களின் மனதிலும் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை. மேற்கூறிய படங்களின் தயாரிப்பாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
உருவம் பொறித்த
தபால் தலை
——————————————–
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் பிரதீப் ஜோஷ்.கே
தான் வசிக்கும் கோவை கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருக்கிறார். இவரின் சமூக சேவையை கருத்தில் கொண்டு இவர் உருவம் பொறித்த தபால் தலையும் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது என்கின்றனர்.
– வெங்கட் பி.ஆர்.ஓ