Take a fresh look at your lifestyle.

நட்பா? காதலா? விஸ்வரூபம் எடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி- அர்ஜுன் தாஸ் காதல்?

107

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. அவர் நடிப்பில் வெளியான ‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் ‘ஆக்‌ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, பொன்னியின் செல்வனில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது.

சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திலும் இவரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ’கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ’இதய’ குறியீடுடன் பகிர்ந்துள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் ‘காதலுக்கு வாழ்த்துக்கள்’ என வாழ்த்தி வருகிறார்கள்.

ஆனால், இது வெறும் நட்பா இல்லை காதலா என ஐஸ்வர்யா லக்‌ஷ்மி எதுவும் சொல்லவில்லை!