Take a fresh look at your lifestyle.

விக்னேஷ் சிவன் எல்ஐசி படத்திற்கு பிரச்சினை; தலைப்பு என்னுடையது என்று டைரக்டர் குமரன் புகார்

167

நேற்று பூஜை உடன் எல்ஐசி என்கிற படத்தை நயன்தாராவின் கணவரும் டைரக்டருமான விக்னேஷ் சிவன் துவக்கியுள்ளார். ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் பெயருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது என்று இயக்குனர் எஸ் எஸ் குமரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்றும் அப்படி மீறி பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்‌.


மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம்.

திரு.விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு UC என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம், LIC என்ற பெயரை 2015 ஆம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான Suma Pictures இன் வாயிலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த திரு.விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்துக்கு அந்தப் பெயரைத் தர கோரி தனது மேலாளர் திரு. மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால், UC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாகப் பொருந்துவதாலும் கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்து விட்டேன்.

ஆக, இந்தத் தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு.விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்தத்
தலைப்பை அவர் வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல எளிய சிறிய தயாரிப்பாளரை நசுக்கும் செயலாகும்.

தன் பாடலில் அதிகாரத்திற்கு எதிராக எழுதிய திரு.விக்னேஷ் சிவன் இப்பொழுது செய்திருக்கும் இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது. அவரின் இந்தச் செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்தின் முன் நிற்கிறேன்.

LIC என்ற தலைப்பின் உரிமை என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு.விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த வகையிலும் இனிப் பயன்படுத்தக் கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,எஸ் எஸ் குமரன், தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர்