







ஒலிம்பியா மூவி புரொடியூசர் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் படம் டாடா. கவின் அபர்ணாதாஸ் கே பாக்யராஜ், வி டிவி கணேஷ் நடித்திருக்கிறார்கள். கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.
கல்லூரி காதலர்கள் ஒரு நாள் செய்த தவறால் ஒரு குழந்தை உருவாகிறது. அந்த குழந்தையை ஆபார்ட் செய்ய காதலன் சொல்ல, காதலி ஆபாட் செய்து கொள்ள மறுத்து பெற்றுக் கொள்கிறார். அதன்பிறகு அந்த குழந்தை நிலைமை என்ன? கணவன் மனைவி என்ன ஆனார்கள்? என்பதுதான் படத்தின் கதை.
அந்த காலத்தில் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மௌன கீதங்கள் படத்தினுடைய சாயல் தான் இந்த படம். அதற்காக பாக்யராஜையே இந்த படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்க வைத்து பிரச்சனை வராமல் பார்த்து இருக்கிறார் டைரக்டர். சாமர்த்தியசாலி தான்.
கவின் கதாநாயகனாக குழந்தையை வளர்க்கலாமா எதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞர்கள் படும் பாட்டை அழகாக சொல்லி இருக்கிறார், டைரக்டர்.
அமர்நாத் காதலியாக கணவனிடம் இருந்து பிரிந்து சென்று வாழும் பெண்ணாக வரும்போதெல்லாம் இயல்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
வி டிவி கணேஷ் ஐடியா கொடுக்கும் கேரக்டரில் செம கலகலப்பு பண்ணுகிறார்.
சமீபத்தில் வந்த படங்களில் போர் அடிக்காமல் ஒரு கதையை சிரத்தையோடு இயக்கி ஒன்ற வைத்த படம் என்றால் அது இந்த படம் மட்டுமே.
ஒரு எம்எல்ஏ இவ்வளவு நேர்த்தியான படத்தை எடுப்பாரா என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் வந்தவாசி எம்எல்ஏ யோசிக்க வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் இந்த படத்தை எடுத்ததற்காக அவரை நாம் பாராட்டலாம் .
காதலர்கள் இளமை மோகத்தில் செய்யும் தவறால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் அழகாக சொல்லி இருக்கிறது ஒவ்வொரு இளைஞர்களும் கட்டாயம் இந்த படத்தை பார்க்க வேண்டும்.