







அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று தந்தை சொன்னதால் அழகில்லாத பெண்ணை திருமணம் செய்து வாழும் கதாநாயகனின் கதை, பியூட்டி.
தீ விபத்தால் முகத்தில் தீக்காய தழும்புகளுடன் கரீனா,கதாநாயகன் ரிஷி வேலை பார்க்கும் வங்கிக்கு வருகிறார். அவரை ரிஷி காதலிக்கிறார். அழகில்லாத தன்னை ஒருத்தன் காதலிக்கிறானே என்று தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்கி கொண்டு வந்து, காதலனை மகிழ்ச்சிப்படுத்த வருகிறார் கரீனா.
ஆனால், கரீனாவை பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் ரிஷி கரீனாவின் முகத்தை சிதைக்க பல வழிகளில் முயல, கரீனாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டர் இந்த விஷயம் தெரிந்து, கரீனாவை காப்பாற்ற முடிவெடுக்க, என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.
கிராமத்து பண்ணையார் தந்தையாகவும், நாகரிக மகனாகவும் இரண்டு வேடங்களிலும் வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார்.
அதிலும் இருதலைக் கொள்ளி எரும்பாக தவிக்கும் மகன் வேடத்தில் தன் தவிப்பை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் ரிஷி.அழகிப் போட்டியில் வென்றவராக வரும் கரீனா ஷா, இன்னொரு பக்கம் தீயினால் பாதிக்கப்பட்ட முகத்துடனும் வருவதால் அவருக்கும் கிட்டத்தட்ட இரண்டு வேடம் போன்ற கெட்டப். வழக்கமான ஹீரோயின்கள் போல் வந்தோம் போனோம் என்று இல்லாமல் கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் கரீனா கவனிக்க வைக்கிறார்.
வித்தியாசமான ஒரு கதையை கொடுத்துள்ள இயக்குனர் கோ.ஆன்ந்த் சிவா, நடிகராகவும் இரண்டு வேடங்களில் தலைகாட்டி இருக்கிறார்.
இவர்களுடன் ஆதேஷ் பாலா அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார், மனநல மருத்துவராக ஆனந்தன் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளரே ஒளிப்பதிவு செய்திருப்பதால் ஆர். தீபக்குமார் பட்ஜெட்டுக்கு தக்கவாறு உழைத்து இருக்கிறார்.
இலக்கியன் இசையில் வெ.இறையன்பு, தமிழ் முருகன் ஆகியேரின் பாடல்களை ரசிக்கலாம்.
அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்ற பழமொழியை மயமாக வைத்து மிக அழகாக பியூட்டி படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் .
பியூட்டி 3.5/5