Take a fresh look at your lifestyle.

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா: தி ரூல்’ க்ளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

48

தென்னிந்திய நடிகர்களுடையே மாபெரும் வெற்றி நாயகனாக திகழ்பவர்தான் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன். குறிப்பாக புஷ்பா படம் மூலம் தென்னிந்திய மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றவர். விமர்சனரீதியாவும் வசூல்ரீதியாவும் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தியா முழுவதும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக எதிர்பார்த்திருந்தனர். புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் அதனாலே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு படம் வெளிவருவதற்கு முன்பு இருந்தாலும் படம் வெளிவந்த பின் ரஷ்மிகாவை ஓவர்டேக் செய்தார் சமந்தா. முக்கியமாக புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம், வசனங்கள் போன்றவை பல பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பல ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சுகுமார் மற்றும் படக்குழுவினர் புஷ்பா2’ படத்தின் மூலம் ரசிகர்களை சந்தோச கடலில் மூழ்கடித்துள்ளனர். அதன்படி, இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் படத்தில் இருந்து சிறிய வீடியோ க்ளிம்ப்ஸை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், புஷ்பா திருப்பதி ஜெயிலில் இருந்து புல்லட் காயத்துடன் தப்பிவிட்டதாக தலைப்பு செய்தியுடன் தொடங்குகிறது. இதுமட்டுமில்லாமல், ’புஷ்பா எங்கே?’(Where is Pushpa?) என்ற கேள்வியும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறிய வீடியோ க்ளிம்ப்ஸ் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கான்செப்ட் டீசர் ஏப்ரல் 7 அன்று மாலை 04:05 மணிக்கு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. படக்குழுவிடம் இருந்து மிகப்பெரியதாக ஒன்று வரவிருப்பதை தற்போது ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

குறிப்பாக ‘புஷ்பா2’ படத்திலும் ராஷ்மிகா மந்தனவே ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் மட்டுமில்லாமல் பகத் ஃபாசில், அனசுயா, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.