Take a fresh look at your lifestyle.

உழைப்பாளர் தினம் திரைப்பட விமர்சனம்

191

“உழைப்பாளர் தினம்”

விமர்சனம்

குடும்ப நலனுக்காக வெளிநாடு சென்று (சிங்கப்பூர்) வாழும் இந்தியர்களின் உணர்பூர்வமான கதையை சொல்ல வரும் படம் ‘உழைப்பாளர் தினம்’

வெளிநாட்டில் வேலை செய்யும் நாயகன் திருமணம் ஆகி 14 நாட்கள் மட்டுமே தன் இளம் மனைவியுடன் இருக்கும் சந்தர்ப்பம். இளம் திருமண ஜோடிகள் முதல் இரவு ஏக்கத்தில் தவிக்க, இவர்களுக்கு ஏதாவது இடையூறு வந்துக் கொண்டே இருக்கிறது. அதை சமாளித்து இருவரும் வாழ, அதற்குள் நாயகனுக்கு வெளிநாடு வேலைக்காக பிரியும் சூழ்நிலை.

நாயகன் மட்டுமின்றி அங்கு வேலை செய்துக்கொண்டு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வாழ்க்கை. குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டில் சம்பாதிக்க செல்லும் இந்தியர்களின் வாழக்கை வரமா? சாபமா? என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது இப்படம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் படமாக உருவாகியிருக்கிறது “உழைப்பாளர் தினம்’.

இதில் முதல் பாதியில் காமெடி, காதல் என்று கலகலப்பாக செல்லும். .இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் பதிவாகியிருக்கிறார் இயக்குனர் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன். வசனங்களுக்கு சபாஷ் போடலாம். யதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுகள்.

சர்வதேச அளவில் ஈரானிய படம் போலும், இந்தியாவில், மலையாள, வங்காள, மராத்தி படம் போல் படத்திற்க்கு என்ன இயல்பாக தேவையோ அதை மட்டுமே தாங்கி இருக்கும் படம் உழைப்பாளர் தினம்.

இதன் உச்சக்கட்ட காட்சி குடும்ப உறவுகளின் உன்னததை எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் படம் சிறப்பாக முடிவடைகிறது.

நட்சத்திரங்கள்: சந்தோஷ் நம்பிராஜன், குஷி, அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குனர் சம்பத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை: மசூத் ஷம்ஷா

பாடல்கள்: சிங்கை சுந்தர், கனியன் செல்வராஜ்

ஒளிப்பதிவு: சதீஸ் துரைகண்ணு

எடிட்டிங்: கோட்டிஸ்வரன்

தயாரிப்பு: சிங்காவுட் புரொடக்‌ஷன், நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ், ராக் எண்டர்டெயின்மெண்ட்ஸ்.

தயாரிப்பாளர்கள்: ராஜேந்திரன் கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், பிரேம்சந்த் நம்பிராஜன், ராஜேந்திரன் நீதிபாண்டி, கஜா, சரஸ்