Take a fresh look at your lifestyle.

*’டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!*

105

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ‘டான்’ படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.