ஆந்திர பிரதேச அரசு டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி “மன மித்ரா” என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் எளிதில் பாலாஜி தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
ஸ்டெப் 1: மன மித்ரா சேவையின் வாட்ஸ்அப் நம்பரான 9552300009-ஐ உங்கள் மொபைலில் சேவ் செய்யவும். ஸ்டெப் 2: வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு “ஹாய்” என்று அனுப்பவும்.
ஸ்டெப் 3: தற்போது கிடைக்கும் ஆப்ஷன்களில் இருந்து “டெம்பிள் புக்கிங் சர்வீசஸ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டெப் 4: அதன் பிறகு பாலாஜி தரிசன டிக்கெட் கிடைக்கும் தன்மையை பற்றிய விவரங்களை வழங்கும். பணம் செலுத்தி விட்டு செயல்முறையை தொடரவும். பணம் செலுத்தப்பட்டதும் உங்களுடைய ஈ-டிக்கெட் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பப்படும். ஸ்டெப் 5: தொந்தரவு இல்லாமல் கோயில் நுழைவுக்கான டிக்கெட்டை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம். தரிசன டிக்கெட் முன்பதிவு தவிர, ஆந்திர அரசு ‘மன மித்ரா’ சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள பல கோயில்களுக்கு இந்த whatsapp மூலம் முன்பதிவு செய்து வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம்.