Take a fresh look at your lifestyle.

பிரபல காமெடி நடிகர் ஆர் எஸ் சிவாஜி உடலுக்கு கார்த்தி அஞ்சலி

12

அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, அன்பே சிவம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி நேற்று (செப்-2) மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கல்களையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் நடிகர் கார்த்தி இன்று காலை 7 மணி அளவில் ராஜா அண்ணாமலைபுரத்தில் (சங்கீதா ஹோட்டலுக்கு அருகில்) நாராயணி அபார்ட்மென்ட்ஸில் உள்ள ஆர்.எஸ்.சிவாஜியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஆர்.எஸ்.சிவாஜி மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளரும் நடிகருமான சந்தானத்தின் மகன் என்பதுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– Johnson PRO