சிவாஜி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நீதி திரைப்படத்தின் வினியோகஸ்தராக திரை உலகில் நுழைந்தவர் கலைப்புலி சேகரன். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் ரசிகர்மன்ற பொறுப்பாளராகவும் இருந்தார். கலைப்புலி தாணு, சேகரன், சூரி மூவரும் இணைந்து அர்ஜுன். நளினி நடிப்பில் சக்தி – கண்ணன் இரட்டையர் இயக்கத்தில் . ” யார்” என்ற படத்தில் கதை, திரைக்கதை. வசனம் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்தார் சேகரன்.
அடுத்து காவல் பூனைகள் , ஊரை தெரிஞ்சிக்கிட்டேன், ஜமீன் கோட்டை, குடும்பசங்கிலி, உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்தும், தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.
சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தில் இணை செயலாளர், செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இப்பொழுது வினியோகஸ்தர் சங்கத்தின் செயலாளராக தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்றி வந்தார். டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் அமைப்பின் தலைவராகவும் பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் இருந்து வந்தார். ஆன்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று (13.4.2025 ஞாயிறு) மதியம் காலமானார். அவருக்கு வயது 73
மாலை 5.00 மணி முதல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில்
28/23
கிரேஸ் கார்டன் முதல் சந்து,
ராயபுரம்
சென்னை 600013
( கல்மண்டபம் காவல் நிலையம் அருகில்,
பென்னி பேக்கரிக்கு பின்புறம்)
விலாசத்தில் வைக்கப்படுகிறது.
நாளை (14.4.2025 திங்கள்கிழமை) காலை 10.30 மணியளவில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
தொடர்புக்கு
9840888110
8122293030