விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும் நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் ‘பிச்சைக்காரன்2’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது
நடிகராக தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் கொடுத்ததன் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி மிகப் பிரபலமான பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வலம் வருகிறார். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட அனைவரும் விஜய் ஆண்டனியை லாபம் தரக்கூடிய மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களும் விரும்பக்கூடிய ஒரு நாயகன் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
அடுத்த வருடம் 2023-ல் அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்கள் அனைத்தும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. குறிப்பாக அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ‘ஆண்டி- பிகில்’ என்ற ரசிகர்களைக் கவரும் சொல்லாடலும் படத்திற்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தற்போது, படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை இந்தியா முழுவதும் ஸ்டார் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி கூறுகையில், ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் எனக் கூறியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80% நிறைவடைந்துள்ளது என்பதையும் கூடுதலாக தெரிவித்துள்ளார்.