நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது.
கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா.