







’பிகினிங்’ என்ற திரைப்படத்தை சிறப்பு திரையிடலில் பார்த்தேன்.
ஒரே திரையில் இரண்டு காட்சிகளை கட்டமைத்து உருவாக்கிய படம் அது.
உலக சினிமா வரலாற்றில் மவுனப்படங்கள் காலத்திலேயே இத்தகைய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு விட்டன.
இருந்தாலும் இத்தகைய பாணி திரைப்படத்தை சில இயக்குநர்கள் மட்டுமே வெற்றிகரமாக கையாண்டு இருக்கிறார்கள்.
அதில் ஒருவர் ’பிகினிங்’ இயக்குநர் ஜெகன் விஜயா .
ஒரே நேரத்தில் இரு காட்சிகள்.
இரண்டு ஒலிகள்.
பார்வையாளர்கள் எதை அவதானிக்க வேண்டும் என்ற திட்டமிடலில் இயக்குநர் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் ஜெகன் விஜயா.
திரையரங்கில் மட்டுமே இப்படத்தின் சிறப்பை உணர முடியும்.
விஜய்,அஜீத்,ரஜினி போன்ற மசாலா திரைப்படங்களின் ரசிகர்களை கட்டிப்போடும் திரை மொழியில் ‘பிகினிங்’ உருவாக்கப்பட்டு இருப்பதே இப்படத்தின் தனிச் சிறப்பு!.
உலக சினிமா பாஸ்கரன்