







நம் தமிழ் மூதாதையர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மக்கள் பார்வைக்கு அருங்காட்சியகமாக கீழடியில் வைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக மக்கள் அங்கு சென்று அருங்காட்சியகத்தை கண்டு களித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இயக்குனர் பேரரசு கீழடிக்கு சென்று உள்ளார். ஆனால் அன்றைய தினம் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலின் முன்பு வெள்ளிக்கிழமை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று மக்களுக்கு தெரியாது. இதுமட்டுமில்லாமல் முதல் வார வெள்ளிக்கிழமை வரை மக்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் முதல் முறையாக வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை என்று அறிவித்திருந்தது ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஈரோடு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சென்னை, திண்டுக்கல் என்று பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து குவிந்திருந்தனர். இவர்களை போல பல பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளும் வந்திருக்கின்றனர்.
மக்கள் எவ்வளவோ கேட்டும் அங்குள்ள அதிகாரிகள் மக்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர் இவர்கள்களை தொடர்ந்து இயக்குனர் பேரரசு அங்குள்ளவர்களிடம் பேசிப் பார்த்திருக்கிறார் அப்பொழுதும் அவர்கள் பிடிவாதமாக யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு பேரரசு மக்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று மக்கள் மத்தியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து விட்டார். இந்த நேரத்தில் இந்த பிரச்சனை அறிந்து மீடியாக்களும் அங்கு வந்து விட்டனர். பின்பு மீடியாக்களிடம் பேசிய இயக்குனர் பேரரசு நிலைமையை மீடியாக்களிடம் தெரிவித்தது என்னவென்றால் ஞாயிறு விடுமுறை என்பது மட்டுமே மக்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கும். நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று யாரும் பெரிதாக அறிந்திருக்கமாட்டார்கள். மேலும் அன்றைய செய்தித்தாளில் ஏப்ரல் 14 க்கு பின் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று வந்திருந்தது என்றும் முக்கியமாக இங்கு வரும் மக்கள் பார்த்து செய்தித்தாளில் செய்திகளை படித்துக் கொண்டு வருவதில்லை என்றும், இதுமட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பது துபாய், அபுதாபி, சவுதி போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டும் இருப்பதாகும்.
நம் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை என்று காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த கீழடிக்கு வரும் மக்கள் தமிழ் உணர்வோடும், நம் மூதாதையர்கள் பயன்படுத்தி பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடும் வருகிறார்கள் மேலும் மாணவ மாணவிகள் தான் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்கள் தான் வர முடியும் என்றும் மக்களும் விடுமுறை நாட்களில் தான் வந்து பார்க்க முடியும் இதில் ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று இவர்கள் விடுமுறை விட்டால் என்ன ஆவது? மேலும் டாஸ்மாக்கில் கூட இங்கு விடுமுறை நாள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் இந்த கீழடி ஆழ்வாராய்ச்சிக்கு ஏன் விடுமுறை என்று பல கேள்விகளை முன் வைத்த பேரரசு, அதே சமயம் எம்பி வெங்கடேசன் அவர்களை தொடர்பு கொண்டு இங்கு இருக்கும் சூழ்நிலையை விளக்க உடனே எம்பி வெங்கடேஷ் அவர்கள் அங்குள்ள அதிகாரிக்கு தொடர்பு கொண்டு மக்களை உள்ளே அனுமதிக்க ஆவன செய்தார் .பேரரசும் எம்பி வெங்கடேசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.மேலும் பேரரசு அவர்கள் கீழடியில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார்.