தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கம்.
மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம். ஏ.பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொரிக்கப் பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.
ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்கள் இங்கே வரவில்லை என்பதற்காக அவர்களை குறைந்து மதிப்பிட வேண்டாம். நாம் எப்போதும் உதவி என சென்று கேட்டாலும் அவர்கள் தயங்காமல் நமக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இங்கே வராததன் காரணமாக கூறி அவர்களை பிரித்துப் பார்க்க வேண்டாம் என நடிகர் சங்கத்துடைய பொருளாளர் கார்த்தி பேச்சு
*நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது*
முக்கிய தீர்மானங்கள்
தென்னிந்திய நடிகர் சங்கம சார்பில் இன்று வரை நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றம்.
*20-3-25 ல் நடிகர் சங்கம் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைவதால் தேர்தல் பணிகளை தொடர்ந்தால் சங்க கட்டடம் கட்டும் பணிகளை பாதிக்கும் என்பதால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*