Take a fresh look at your lifestyle.

கல்கி திரைப்பட விமர்சனம்

327

மிகப்பிரமாண்டமான பொருட்செளவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் கல்கி.
பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் இது.

அந்த காலத்து மாயாஜால படம் போல் இந்த படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார்கள். புராணத்தையும் எதிர்கால அறிவியலையும் ஒன்றிணைத்து ஒரு கதையை உருவாக்கி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறார்கள். பல இடங்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாமல் குழம்ப வேண்டி இருக்கிறது. மூன்று மணி நேரம் படம் எடுத்துவிட்டு நெளிய வைக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஆரம்பத்திலும் முடிவிலும் அரை அரை காட்சிகளில் கமல் தோன்றுகிறார். இந்தியன் 2 கெட்ட அப் லியே இருக்கிறார்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு படத்தை இந்தியாவில் உருவாக்க நினைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் படம் பார்க்கும் பொழுது நகைச்சுவை காட்சி இல்லாமலே சிரிக்க வேண்டி இருக்கிறது.

இந்தப் படத்தில் பொருத்தமான கதாபாத்திரம் அமிதாப் பச்சனுக்கு… அவருடைய வயதுக்கு ஏற்ற ஒரு சாமியார் பாத்திரம். வர்மக்கலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அவர் சண்டையிடும் காட்சிகள் அருமை. பிரபாஸ் தான் படத்தின் கதாநாயகன் ஆனால், அங்கே இங்கே வந்து விட்டுப் போகிறார்.

தீபிகா படுகோன் வயிற்றில் கருவை சுமந்து படும் கஷ்டங்களை முகத்தில் பிரதிபலிக்கிறார்.
புராண காலத்தில் தொடங்கி நவீன காலத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். கடவுளின் குழந்தை வயிற்றில் இருப்பதை அறிந்து அவளை சிறை வைக்கிறது ஒரு கூட்டம். அங்கிருந்து தீபிகா படுகோன் தப்பி சென்றுவிட, அவரை தேடி கண்டுபிடித்து அந்த வில்லன் கூட்டம் பிடித்து விடுகிறது. அதிலிருந்து பிரபாஸ் எப்படி அவரை காப்பாற்றுகிறார் என்பதை நச்சென்று சொல்லாமல் இழு என்று இழுத்து சோம்பல் வர வைக்கிறார் படத்தின் இயக்குனர். இந்த படத்திற்கு இவ்வளவு செலவு தேவையா?
கல்கியை விட விட்டலாச்சாரியா படங்களே மேல் என்பது போல் உள்ளது.

மார்க்: 10 க்கு 6.