நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம்?
இன்று மாலை யோகி டா அட பாடல் வெளியிட்டு விழாவில் அறிவிக்கிறார் விஷால்
யோகிடா படத்தில் நடித்து வருகிறார் சாய் தன்ஷிகா .அவருக்கு இதுதான் கடைசி படம். விரைவில் அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் திருமணம் நடக்க போவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது . இந்த செய்தியை விஷாலே என்று மாலை நடக்கும் யோகிடா பட பத்திரிகையாளர் காட்சியில் அறிவிக்கப் போவதாக சொல்லப்படுகிறது
தமிழ்த் திரை உலகின் முன்னணி கதாநாயகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஷால். இவர் நடித்த திமிரு, சண்டைக்கோழி, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்றவை மக்களிடையே வரவேற்பை பெற்ற படங்கள். இவர் தம் துணிச்சல் மற்றும் துடிப்பு மிக்க நடிப்பால் தமிழ் மக்களின் அமோக ஆதரவு பெற்ற நடிகரானார். இவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இவர் அவ்வப்போது சமூக நலன் சார்ந்த கருத்துக்களை அரசிடம் முன் வைப்பார்.. மிக்ஜாம் புயல், பென்ஜல் புயலின் போதும் தான் நடிஙர் என்ற பந்தா இல்லாமல் களத்தில் இறங்கி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி பொதுச் சேவை செய்தார்..தென்னிந்திய திரைப்பஞ நடிகர்கள் சங்க தலைவரும் ஆவார்.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் பகுதியில் கூத்தாண்டவர் சித்திரைத் திருவிழா நடை பெற்றது. இத் திருவிழா திருநங்கைகளை சிறப்பிக்க ஆண்டு தோறும் நடத்தப்படும் விழா. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்து திருநங்கைகள் பங்ககேற்பார்கள். வெகு விமரிசையாக நடைபெறும் விழா.
இவ் விழாவில் விஷால் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்..
விழாவின் போது விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார. உடனடியாக அவர் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். காலையில் இருந்து உணவு ஏதும் உண்ணாமல் ஜுஸ் மட்டுமே குடித்தார் என்று விஷால் தரப்பு விளக்கம் அளித்தது.
இதற்கு முன்பு மதகஜராஜா பட புரமோஷன் போது இவரின் கைகள் நடுங்கியதாக ஒரு வதந்தி பரவி பெரும் பேசு பொருளானது. அப்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தான் என்றும் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் விஷால் கேட்டுக் கொண்டார். அதே சமயம் தான் மது, சிகரெட் போன்றவற்றை ஐந்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டதாக தெரிவித்து சர்ச்சைப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்…
இருப்பினும் அந்த சம்பவத்தையும் கூவாகம் சம்பவத்தையும் முடிச்சி போட்டு செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஷாலுக்கும், பிரபல நடிகை தன்ஷிகா ராய்க்கும் விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் எனவும் கூறப்படுகிறது.
திரைப்பட நடிகர் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழாவிற்கு பிறகு திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது..
இதனால் விஷால் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்களும் அவரது திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன்ர்..